ப்பா.. மரகத பச்சை நிற புடவையில் ஜொலிக்கும் சுருதிஹாசன்.. அதன் விலை எவ்வளவு தெரியுமா?

சென்னை: நடிகை சுருதிஹாசன் கவர்ச்சி பொங்க போட்டோக்களை போட்டு வந்த நிலையில், தற்போது சேலையில் செம அழகாக நடத்திய போட்டோஷூட் புகைப்படங்கள் பலரது கவனத்தை ஈர்த்துள்ளன.

மரகத பச்சை நிற புடவையை அணிந்து கொண்டு குறைவான மேக்கப்பில் நிறைவாக போஸ் கொடுத்துள்ள சுருதிஹாசனை ரசிகர்கள் வர்ணித்து வருகின்றனர்.

ஹரிதா மண்டலா எனும் பெயர் கொண்ட அந்த சேலையின் விலை குறித்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிரேக்கப்

பிரேக்கப்

முதல் காதலர் மைக்கேல் கார்சலேவுடன் பிரேக்கப் ஆன நிலையில், சினிமாவுக்கு சின்ன கேப் கொடுத்திருந்த நடிகை சுருதிஹாசன் மீண்டும் சினிமாவில் பிசியாகி உள்ளார். விஜய்சேதுபதியின் லாபம் திரைப்படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தாலும் அந்த படம் அவருக்கு பெரிய வெற்றியை கொடுக்கவில்லை.

பிரபாஸ் படம் தான் நம்பிக்கை

பிரபாஸ் படம் தான் நம்பிக்கை

கேஜிஎஃப் பட இயக்குநர் நடிகர் பிரபாஸை வைத்து இயக்கி வரும் சலார் படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார் சுருதிஹாசன். அந்த படம் வெளியாகி ஹிட் அடித்தால் மீண்டும் விட்ட இடத்தை சூப்பராக பிடித்து விடுவார் என்கிற நம்பிக்கை சுருதிஹாசனுக்கு உள்ளது.

காதலருடன் தீபாவளி

காதலருடன் தீபாவளி

முதல் காதல் பிரேக்கப் ஆன சோகத்தில் இருந்த சுருதிஹாசன் தற்போது டூடுல் கலைஞர் சாந்தனு ஹசாரிகா என்பவரை காதலித்து லிவிங் டுகெதர் வாழ்க்கையை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஒரே வீட்டில் லாக்டவுனில் இருக்கிறோம் என சுருதிஹாசனே ஏகப்பட்ட போட்டோக்களை ஷேர் செய்துள்ள நிலையில், இந்த தீபாவளியையும் காதலருடன் கொண்டாடிய புகைப்படங்களை அவர் ஷேர் செய்து வைரலாக்கினார்.

மரகத பச்சை

மரகத பச்சை

இந்நிலையில், தற்போது மரகத பச்சை நிற சேலையை உடுத்திக் கொண்டு கலக்கலாக சுருதிஹாசன் போட்டோஷூட் நடத்திய புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வரிசையாக சேலையை செழிப்பாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வைரலாக்கி வருகிறார்.

Recommended Video

Bigg Boss 5 ல நான் Surprise Entry கொடுப்பேனா ? | Actress Amritha Aiyer Exclusive | Filmibeat Tamil
கமெண்ட் போட்ட தங்கை

கமெண்ட் போட்ட தங்கை

நீண்ட நாட்களுக்கு பிறகு சேலையில் செம சூப்பராக இருக்கும் சுருதிஹாசனின் புகைப்படங்களை பார்த்த அவரது தங்கையும் நடிகையுமான அக்‌ஷரா ஹாசன் 'Woah woah woah' என கமெண்ட் செய்துள்ளார். காதலர் சாந்தனு லைக் போட 2 லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்கள் ஹார்ட்டீன்களை அள்ளி குவித்து வருகின்றனர்.

சேலையின் விலை

சேலையின் விலை

ஆடை வடிவமைப்பாளர் ஹர்மான் கவுர் உருவாக்கிய இந்த சேலை Deep Thee இணையத்தில் விற்பனைக்கு உள்ளது. கையால் நெய்யப்பட்ட இந்த சேலையின் விலை ஜாக்கெட் உடன் ரூ.43,800 என அந்த வெப்சைட்டில் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சுருதிஹாசன் டீப் தீ வெப்சைட்டை குறிப்பிட்டு இருந்த நிலையில், நெட்டிசன்கள் அந்த சேலையின் விலை குறித்து ஆராய்ந்து இணையத்தில் பதிவுட்டு வைரலாக்கி வருகின்றனர்.

கட்டிக்க ஆசைப்படும் பெண் வழக்கறிஞர்

கட்டிக்க ஆசைப்படும் பெண் வழக்கறிஞர்

மணப்பெண் கோலத்தில் மங்களகரமாக சுருதிஹாசன் இருப்பதை பார்த்து ஏகப்பட்ட பேர் லைக் போட்டு வரும் நிலையில், பெண் வழக்கறிஞரான பிரியங்கா கிமானி "உங்களை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறேன்" என கமெண்ட் அடித்துள்ளதும் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X