»   »  அப்பாடி ரெய்னாவுக்கு கல்யாணம்: நிம்மதியில் ஸ்ருதி ஹாஸன்?

அப்பாடி ரெய்னாவுக்கு கல்யாணம்: நிம்மதியில் ஸ்ருதி ஹாஸன்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: கிரிக்கெட் வீரர் ரெய்னாவுக்கு திருமணம் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளதால் ஸ்ருதி ஹாஸனுக்கு ஒரு தலைவலி தீர்ந்துள்ளது.

தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வருபவர் ஸ்ருதி ஹாஸன். அவர் தற்போது விஜய்யின் புலி படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். நடிப்பது தவிர்த்து படங்களில் பாடல்களும் பாடி வருகிறார்.

இந்நிலையில் அவருக்கும் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவுக்கும் இடையே காதல் என்று செய்திகள் வெளியாகின. இந்த செய்திகளை பார்த்த அவர்கள் இருவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

இல்லை

இல்லை

நான் ஸ்ருதியை காதலிக்கவில்லை என ரெய்னாவும், நான் ரெய்னாவை காதலிக்கவில்லை என்று ஸ்ருதியும் கற்பூரம் அடிக்காத குறையாக தெரிவித்தனர்.

காதலே தான்

காதலே தான்

ஸ்ருதி, ரெய்னா கூறுவதை யாரும் காதில் வாங்கவில்லை. அவர்கள் காதலர்கள் தான். எந்த காதலர்கள் தான் தங்கள் காதலை ஒப்புக் கொண்டனர் என்று பலரும் பேசி வந்தனர்.

ரெய்னா

ரெய்னா

காதல் வதந்தி பரவிய நிலையில் தான் ரெய்னாவுக்கும் அவரது நீண்ட நாள் தோழியான பிரியங்கா சவுத்ரிக்கும் வரும் ஏப்ரல் 3ம் தேதி திருமணம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ருதி

ஸ்ருதி

ரெய்னாவின் திருமண அறிவிப்பால் ஸ்ருதி ஹாஸன் நிம்மதி அடைந்திருப்பார். இனியாவது ஏதாவது வதந்தி பரவாது என்று அவர் நிம்மதியாக உள்ளாராம்.

English summary
Shruti Haasan might be relieved after hearing the wedding announcement of his rumoured boyfriend cricketer Suresh Raina.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil