பிரபல நடிகையின் ரோசமான குத்துச்சண்டை.. லோகேஷ் கனகராஜ் இதை பார்த்தால் விடமாட்டாரே!
சென்னை: இசையமைப்பாளர், பாடகர், மாடல், நடிகை என பன்முகத்திறமையோடு பிஸியாக இருப்பவர் ஸ்ருதி ஹாசன். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான கூலி படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து முடித்திருக்கிறார். இதனைத்தொடர்ந்து, இசை நிகழ்ச்சியிலும் பங்கேற்கும் ஸ்ருதிஹாசன் தற்போது வெளியிட்டிருக்கும் வீடியோவை பார்த்து நெட்டிசன்கள் அவரை பாராட்டி வருகின்றனர். இந்த வயதிலும் இப்படி ஒரு திறமையா என்றும் வியந்து பேச தொடங்கியுள்ளனர்.
ஏழாம் அறிவு படத்தில் திரையுலகில் அறிமுகம் ஆவதற்கு முன்பே ஸ்ருதி ஹாசன் இசையால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். ஹே ராம் படத்தில் இளையராஜா இசையில் ஒரு பாடலை பாடியிருப்பார். இப்பாடலை மீண்டும் கமல்ஹாசனும், ஸ்ருதியும் இசைஞானி 75 நிகழ்ச்சியில் பாடி அசத்தினர். இப்பாடலும் சமூகவலைதளங்களில் டிரெண்ட் ஆனது. பிறகு தமிழ், தெலுங்கில் விஜய், அஜித், சூர்யா, பவன் கல்யாண், மகேஷ் பாபு என அனைத்து சூப்பர் ஸ்டார் படங்களில் ஹீரோயினாக நடித்து பிரபலம் அடைந்தார். தென்னிந்திய சினி்மாவில் முன்னணி நடிகையாக இருக்கும் இவர் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

காதல் பிரேக் அப்: ஸ்ருதி ஹாசன் லண்டனை சேர்ந்த மைக்கேல் கார்சலை காதலித்து வந்தார். இருவரும் ஒன்றாக பல நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டனர். ஆனால், இருவரும் பிரிந்தனர். இதுகுறித்து பலவிதமான செய்திகள் வெளியாகியும் ஸ்ருதிஹாசன் மெளனமாக இருந்தார். பின்னர், காதல் பிரேக் அப்பிற்கு நீண்ட நாள் கழித்து தனது சமூகவலைதள பக்கத்தில் பதில் அளித்த அவர், காதலுக்கு இது தான் விதி என்றும் எதுவும் இல்லை. நல்லவர்கள் சில நேரங்களில் நல்லவர்கள், அதே நபர்கள் சில நேரங்களில் மோசமானவர்கள். காதல் முறிவால் எனக்கு எந்த வருத்தமும் இல்லை.இது நல்ல அனுபவமாக இருந்தது. நிறைய கற்றுக்கொண்டேன். நான் ஒரு சிறந்த காதலுக்காக காத்திருக்கிறேன். அது மீண்டும் கிடைத்தால் மகிழ்ச்சி என்றும் தெரிவித்தார். மீண்டும் காதல் வயப்பட்ட ஸ்ருதி சாந்தனு ஹஸாரிகா என்பவரை காதலித்தார். பின்பு இதுவும் பிரேக் அப் ஆனது குறிப்பிடத்தக்கது.
மீண்டும் காதலா?: லியோ படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் ரஜினி படத்தில் கமிட் ஆவதற்கு முன்பு ஸ்ருதி ஹாசனுடன் இனிமேல் என்ற ஆல்பம் பாடலில் நடித்திருந்தார். இப்படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சி ஒரு பட ரிலீஸை போன்று ஸ்ருதிஹாசனும், லோகேஷ் கனகராஜூவும் செய்திருந்தனர். இப்படால் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதில், இடம்பெற்ற ரொமான்ஸ் காட்சிகளை பார்த்து இருவரும் காதலிப்பதாகவும் கிசுகிசுக்கப்பட்டது. இதைதொடர்ந்து கூலி படத்தில் ஸ்ருதிஹாசன் நடிப்பதாக அறிவிப்பு வெளியானது. இதில்,சத்யராஜின் மகளாக நடிப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், கூலி படப்பிடிப்பு தளத்தில் பிறந்தநாள் கொண்டாட்டம் என பரபரப்பை ஏற்படுத்தினார் ஸ்ருதிஹாசன். இருவரும் காதலிப்பதாக வெளியாகும் கிசுகிசுவிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இருவரும் நண்பர்கள் என செய்திகள் வெளயானது. இதுவரை அப்படித்தான் இருக்கின்றனர் என்றும் கூறப்பட்டது.

குத்துச்சண்டை வீராங்கனை: கூலி படத்திற்கு பிறகு சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் ஸ்ருதிஹாசன் குத்துச்சண்டை பழகும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். இதில், நீண்ட நாட்களுக்கு பிறகு கையில் க்ளோவ்ஸ் இல்லாமல் பயிற்சி எடுக்கிறேன் என தெரிவித்தார். அப்போது பயங்கர ஆக்ரோசமாக அவர் பயிற்சி செய்கிறார். பின்பு காலால் சண்டை பயிற்சி செய்வதும் பதிவாகியுள்ளது. ஆனால், இந்த பயிற்சி அடுத்த படத்திற்காகவா அல்லது கூலி படத்திற்கா என நெட்டிசன்கள் குழம்பி போயுள்ளனர். முன்பு எடுத்த பயிற்சி வீடியோவை பதிவிட்டாரா எனவும் கமெண்ட் செய்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











