மீண்டும் தமிழ் சினிமா... விஷாலுக்கு நன்றி சொன்ன ஸ்ருதிஹாசன்

சென்னை: பூஜை படம் மூலம் மீண்டும் தன்னை தமிழ் சினிமாவிற்கு அழைத்து வந்ததற்காக நடிகர் விஷாலுக்கு தனது நன்றிகளைத் தெரிவித்துள்ளார் ஸ்ருதிஹாசன்.

நடிகர் கமல் -சரிகா தம்பதியினரின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன். இவர் தமிழில் 3 மற்றும் ஏழாம் அறிவு ஆகிய படங்களில் நடித்துள்ளார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தமிழில் அறிமுகமான ஸ்ருதிக்கு அடுத்தடுத்து சொல்லிக் கொள்வது போல் படங்கள் அமையவில்லை. இதனால், தனது கவனத்தை தெலுங்கு மற்றும் பாலிவுட் பக்கம் திருப்பினார் ஸ்ருதி.

இந்நிலையில் மீண்டும் ஹரி இயக்கத்தில் விஷால் நாயகனாக நடிக்கும் பூஜை படத்தின் மூலம் தமிழுக்கு திரும்பியுள்ளார். இது தொடர்பாக அப்படத்தின் புரோமஷனல் விழாவில் கலந்து கொண்ட ஸ்ருதி கூறியதாவது :-

ரொம்ப ஹேப்பி...

ரொம்ப ஹேப்பி...

பூஜை படத்தில் நடித்தது நிச்சயமாக மகிழ்ச்சியாக இருந்தது. இப்படத்தின் மூலம் நான் மீண்டும் தமிழ் திரையுலகத்திற்கு திரும்பியுள்ளேன்.

விஷாலுக்கு நன்றி...

விஷாலுக்கு நன்றி...

இப்படத்தின் நாயகி வேடத்தை எனக்களித்து மீண்டும் என்னை தமிழிற்கு அழைத்து வந்ததிற்கு விஷாலுக்குத் தான் நான் நன்றிகளைச் சொல்ல வேண்டும்.

மொழி ஒரு தடையல்ல...

மொழி ஒரு தடையல்ல...

பன்முக கலாச்சாரப் பின்னணி உடைய குடும்பத்திலிருந்து வந்தவள் நான். எனவே எந்தமொழிப் படத்தில் நடிப்பது குறித்தும் எனக்கு தயக்கமில்லை.

கட்டுப்பாடு இல்லை...

கட்டுப்பாடு இல்லை...

இந்த குறிப்பிட்ட மொழியில் தான் நடிக்க வேண்டும் என எனக்கு நானே கட்டுப்பாடு விதித்துக் கொள்ள விரும்பவில்லை என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

முக்கியக் கதாபாத்திரத்தில்...

முக்கியக் கதாபாத்திரத்தில்...

ஹரி இயக்கியுள்ள இப்படத்தில் சத்யராஜ், ரேணுகா, சித்தாரா மற்றும் ஜெயப்பிரகாஷ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

பூஜை கேலரி

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X