ஸ்ருதி ஹாஸனுக்கு குடல் வால் ஆபரேஷன்

By Siva

ஹைதராபாத்: வயிற்று வலியால் ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகை ஸ்ருதி ஹாஸனுக்கு குடல் வால் (அப்பெண்டிசைட்டிஸ்) அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

நடிகை ஸ்ருதி ஹாஸன் புத்தாண்டை தனது தந்தை கமல் ஹாஸனுடன் சென்னையில் கொண்டாடினார். இதையடுத்து அவர் மறுநாள் ஹைதராபாத்துக்கு விமானத்தில் சென்றார். அங்கு அவர் காலை 6 மணி முதல் மாலை வரை படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று அவர் எவடு தெலுங்கு பட விளம்பர நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டது.

மருத்துவமனையில் அனுமதி

மருத்துவமனையில் அனுமதி

வயிற்று வலியால் துடித்த ஸ்ருதியை ஹைதராபாத் ஜுபிளி ஹில்ஸ் பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு குடல் வால் நோய் (அப்பெண்டிசைட்டிஸ்) இருப்பதை கண்டறிந்தனர்.

தந்தையிடம் ஆலோசனை

தந்தையிடம் ஆலோசனை

குடல் வால் பிரச்சனைக்கு உடனே அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் ஸ்ருதியிடம் தெரிவித்தனர். இதையடுத்து ஸ்ருதி தனது தந்தைக்கு போன் செய்து அறுவை சிகிச்சை செய்ய சென்னை வரவா அல்லது அம்மா இருக்கும் மும்பைக்கு செல்லவா என்று கேட்டுள்ளார். அதற்கு கமலோ ஹைதராபாத்திலேயே அறுவை சிகிச்சை செய்து கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.

அறுவை சிகிச்சை

அறுவை சிகிச்சை

தந்தையின் ஆலோசனையை ஏற்ற ஸ்ருதி ஹைதராபாத் மருத்துவமனையிலேயே அறுவை சிகிச்சை செய்து கொண்டார். ஸ்ருதி அடுத்த 10 நாட்களுக்கு ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுருத்தி உள்ளனர். ஸ்ருதியை அவரது தோழிகள் உடன் இருந்து கவனித்து வருகின்றனர். அவரை என்று டிஸ்சார்ஜ் செய்வது என்று மருத்துவர்கள் நாளை முடிவு செய்வார்களாம்.

தோழிகள்

தோழிகள்

ஸ்ருதியை அவரது தோழிகள் உடன் இருந்து கவனித்து வருகின்றனர். அவரை என்று டிஸ்சார்ஜ் செய்வது என்று மருத்துவர்கள் நாளை முடிவு செய்வார்களாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X