கடவுளே, ஒரு நாளைக்கு 26 மணிநேரம் கொடுங்களேன்!: ஸ்ருதி ஹாஸன்
மும்பை: ஸ்ருதி ஹாஸனுக்கு ஒரு நாளைக்கு 26 மணிநேரம் இருக்க வேண்டுமாம்.
ஸ்ருதி ஹாஸன் தமிழ் படங்களில் தற்போது நடிக்கவில்லை. மாறாக இந்தி, தெலுங்கு படங்களில் ரொம்பவே பிசியாக உள்ளார். அவர் தெலுங்கில் நடித்துள்ள பலுப்பு படத்தை எதிர்பார்த்துள்ளார். மேலும் 2 தெலுங்கு படங்கள் இந்த ஆண்டு ரிலீஸ் ஆகின்றன. பிரபுதேவா எடுத்து வரும் இந்தி படமான ராமைய்யா வஸ்தாவய்யாவிலும் நடித்து வருகிறார்.

மேலும் அல்லு அர்ஜுன் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அதனால் ஓய்வின்றி ஹைதரபாத்துக்கும், மும்பைக்குமாக ஓடி ஓடி நடித்து வருகிறார்.
இந்நிலையில் ஸ்ருதி ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
என்னை பிசியாக வைத்திருக்கும் கடவுளுக்கு நன்றி. தயவு செய்து ஒரு நாளைக்கு 26 மணிநேரம் கொடுங்களேன் என்று தெரிவித்துள்ளார்.
Comments


Click it and Unblock the Notifications