ரிலீசான படங்கள் எல்லாம் ஹிட்... ஸ்ருதி ஹேப்பி அண்ணாச்சி!
சென்னை: ரிலீசான தனது தெலுங்குப் படங்கள் அனைத்தும் ஹிட்டடித்துள்ளதாலும், தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிவதாலும் ஸ்ருதிஹாசன் மகிழ்ச்சியில் உள்ளாராம்.
கமல் -சரிகா தம்பதியின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன், தமிழ், தெலுங்கு, இந்தி திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக உள்ளார். கடந்த 2009ம் ஆண்டு லக் படத்தின் மூலம் ஹிந்தியில் அறிமுகமான ஸ்ருதி, தமிழில் சூர்யா, தனுஷ் ஆகியோருடன் நடித்துள்ளார்.
இந்நிலையில், சமீபத்தில் தெலுங்கில் சுருதி ஹாசன் நடித்து வெளியான ‘ஏவடு' ரேஸ்குர்ராம் படங்கள் வெற்றி பெற்றுள்ளன. இது தொடர்பாக ஸ்ருதி செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது :-

நிறைய படங்கள்...
திரையுலகில் இவ்வளவு பெரிய நிலைமைக்கு வருவேன் என்று எதிர்பார்க்க வில்லை. குறுகிய காலத்தில் நிறைய படங்களில் நடித்து விட்டேன்.

ஹிட்...
குறிப்பாக இந்த வருடம் எனக்கு மகிழச்சியானதாக அமைந்தது. ரிலீசான எல்லா படங்களும் ஹிட்டாகியுள்ளன.

மகிழ்ச்சி...
தற்போது நான்கு இந்தி படங்கள் கைவசம் உள்ளன. மகேஷ்பாபுவுடனும் நடிக்கிறேன். படங்கள் குவிவதால் மகிழ்ச்சியாக இருக்கிறது' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

பூஜை...
ஸ்ருதி தற்போது விஷால் ஜோடியாக பூஜை படத்தில் நடித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











