விஜய் சேதுபதிக்காக ஸ்ருதிஹாசன் செய்த செயல்.. மிஷ்கினின் மெனக்கெடலை பாருங்க பாஸ்!

சென்னை: தென்னிந்திய சினிமாவின் பன்முகத் திறமையாளரான நடிகை ஸ்ருதிஹாசன், நடிப்புக் களத்தில் மட்டுமல்லாமல் தனது இசைக் குரலாலும் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்து வருகிறார். அந்த வகையில், தற்போது மிஷ்கின் இயக்கத்தில், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் 'டிரெய்ன்' திரைப்படத்திற்காக அவர் பாடியுள்ள "கன்னக்குழிக்காரா" பாடல், சமூக வலைத்தளங்களில் வைரலாகி ரசிகர்களின் மனதிலும், இசைப் பட்டியலிலும் நீங்கா இடம்பிடித்துள்ளது.

வழக்கமான காதல் பாடல்களிலிருந்து விலகி, "கன்னக்குழிக்காரா" பாடல் கிராமிய மணத்தையும், உத்வேகமான காதலையும் எளிமையாகவும், உணர்வுபூர்வமாகவும் வெளிப்படுத்துகிறது. இந்தப் பாடலின் வரிகளை திரையில் உயிர்ப்பிக்க, ஸ்ருதிஹாசனின் தனித்துவமான குரல் முக்கிய பங்காற்றுகிறது. ஒரு நடிகை தன் குரலால் மற்றொரு நடிகரின் திரை பிம்பத்தை மெருகேற்றுவது அரிதான ஒன்று; ஆனால் இப்பாடலில் அது இயல்பாகவே கைக்கூடியுள்ளது.

Shruti Hasan elevates Vijay Sethupathi with her magical voice in Mysskin s Train movie
Photo Credit:

சாதாரண மனிதர்களின் உணர்வுகளையும், வலிகளையும், காதலையும், நகைச்சுவையையும் இயல்பாக வெளிப்படுத்தும் கலைஞர் விஜய் சேதுபதி. அவரது யதார்த்தமான திரைத்தோற்றத்திற்கு, ஸ்ருதிஹாசனின் குரல் ஒரு மென்மையான உணர்வைச் சேர்க்கிறது. குறிப்பாக, பாடல் வரிகளில் உள்ள நுட்பமான உணர்வுகளைக் குரலின் ஏற்றத் தாழ்வுகள் மூலம் ஸ்ருதி வெளிப்படுத்திய விதம், கேட்பவர்களின் மனதை ஆழமாகப் பதிய வைக்கிறது.

Shruti Hasan elevates Vijay Sethupathi with her magical voice in Mysskin s Train movie
Photo Credit:

இப்பாடலின் மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சம், இயக்குநர் மிஷ்கின் இதற்குக் குறிப்பிடத்தக்க இசையை அமைத்துள்ளார். கபிலன் பாடலின் வரிகளை எழுதியுள்ளார். இசை, பாடலாசிரியர் வரிகள், மற்றும் ஸ்ருதிஹாசனின் குரல் ஆகிய மூன்றும் ஒன்றிணைந்து, இந்த 'கன்னக்குழிக்காரா' பாடலை ரசிகர்களுக்கு ஒரு தனித்துவமான அனுபவமாக மாற்றியுள்ளது.

ஸ்ருதிஹாசனின் மயக்கும் குரலில் ஒலிக்கும் "கன்னக்குழிக்காரா" பாடல் இசை ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதுடன், முன்னணி இசை தளங்களில் முதலிடத்தில் இடம்பிடித்துள்ளது. பரவலான ரீதியில் ரசிகர்கள் இதனைப் பகிர்ந்துகொண்டு, கொண்டாடி வருகின்றனர். மேலும் பலரும் இப்பாடலில் உள்ள கிராமிய சாயலையும், எளிமையான காதலையும் பாராட்டி வருகின்றனர்.

'சலார்' , கூலி போன்ற பான் இந்தியப் படங்கள் என நடிப்பில் படு பிசியாக இருக்கும் ஸ்ருதிஹாசன், தனது இசைத் திறமையையும் தொடர்ந்து வளர்த்து வருகிறார். விரைவில் அவரது அடுத்த இசை முயற்சிகள் மற்றும் திரைப்பட அறிவிப்புகள் குறித்த கூடுதல் விவரங்கள் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X