»   »  இந்த 'ஹஸ்பன்ட் வெளாட்டு' தேவையா ஸ்ருதி?

இந்த 'ஹஸ்பன்ட் வெளாட்டு' தேவையா ஸ்ருதி?

Posted By:
Subscribe to Oneindia Tamil

விளையாட்டுத்தனமாக ஒரு செல்ஃபியை வெளியிடப் போய், தேவையற்ற சர்ச்சையில் சிக்கிக் கொண்டுள்ளார் ஸ்ருதி ஹாஸன்.

ஏற்கெனவே இவருக்கு ரகசிய திருமணம் நடந்துவிட்டது... மும்பையில் தனிக்குடித்தனம் நடத்துகிறார் என்றெல்லாம் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

Shruti Hassan's selfie with 'Husband'!

இந்த சூழலில், சமீபத்தில் ஒரு உணவகத்துக்கு தன் நெருங்கிய நண்பரான நிரஞ்சனுடன் சென்றுள்ளார் (இவர் பாலிவுட்டில் பிரபல திரைக்கதை எழுத்தாளர்).

அங்கு வைத்து இருவரும் ஒரு செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.

அதை தனது இன்ஸ்டாகிராமில் 'கேம் ஆஃப் த்ரோன் லஞ்சில் எனது அன்பு கணவருடன்' என்று தமாஷாகப் போட்டாராம்.

உடனே சமூக வலைத்தளங்களில் இந்த செய்தி பரவியது. ஸ்ருதிஹாஸன் தன் ரகசிய கணவருடன் இருக்கும் படம் வெளியானது என்று செய்தி போட்டுவிட்டன வலை தளங்கள்.

உடனே ஸ்ருதி, "யாருக்கும் நகைச்சுவை உணர்வே இல்லை. குறும்பாக நான் போட்ட படத்தை ஜாலியாக எடுத்துக் கொள்ளாமல் இப்படி இம்சை பண்ணலாமா?" என்று கடுப்பாகக் கேட்டுள்ளார்.

எந்த விஷயத்தில் விளையாட்டு என்றில்லையா ஸ்ருதி?

English summary
Shruti Hassan's selfie with 'Husband' Niranjan going viral in social websites and later the actress mentined that she humourously mentioned him as husband.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil