இனி ரூ.1.5 கோடி கொடுத்தால் மட்டுமே ஸ்ருதி நடிப்பார்
மும்பை: ஸ்ருதி ஹாஸன் தனது சம்பளத்தை ரூ.1 கோடியில் இருந்து ஒன்றரை கோடி ரூபாயாக உயர்த்தியுள்ளாராம்.
ஸ்ருதி ஹாஸன் நடித்த கப்பார் சிங் தெலுங்கு படம் ஹிட்டானது. இதையடுத்து அவர் நடித்த பலுபு படத்திற்கு ரூ.1 கோடி சம்பளம் வாங்கினார். ஆந்திராவில் ஸ்ருதிக்கு மவுசு உள்ளது என்பதால் தயாரிப்பாளர்களும் அவர் கேட்கும் சம்பளத்தை தருகின்றனர்.
இந்நிலையில் ஸ்ருதி நடித்த டி டே மற்றும் ராமையா வஸ்தாவய்யா ஆகிய 2 இந்தி படங்கள் கடந்த மாதம் அதுவும் ஒரே தேதியில் ரிலீஸாகின. ஸ்ருதியின் முந்தைய இந்திய படங்கள் ஊத்திக் கொண்டதால் அவர் இந்த படங்களை பெரிதும் எதிர்பார்த்தார். அவரது எதிர்பார்ப்பு வீண் போகவில்லை. இரண்டு படங்களும் ஓடிவிட்டது, மேலும் ஸ்ருதியின் நடிப்பும் பாராட்டப்பட்டுள்ளது.
இதனால் ஸ்ருதி தனது சம்பளத்தை ரூ. 1.5 கோடியாக உயர்த்தியுள்ளாராம்.


Click it and Unblock the Notifications












