»   »  வாள் பயிற்சி எல்லாம் எடுத்த ஸ்ருதி ஹாஸன் சங்கமித்ராவில் இருந்து நீக்கம்

வாள் பயிற்சி எல்லாம் எடுத்த ஸ்ருதி ஹாஸன் சங்கமித்ராவில் இருந்து நீக்கம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சங்கமித்ரா படத்தில் இருந்து ஸ்ருதி ஹாஸன் நீக்கப்பட்டுள்ளார்.

சுந்தர் சி. இயக்கும் மெகா பட்ஜெட் படமான சங்கமித்ராவில் ஸ்ருதி ஹாஸனை ஒப்பந்தம் செய்தார்கள். இளவரசி சங்கமித்ராவாக நடிக்க ஸ்ருதி லண்டனுக்கு சென்று வாள் பயிற்சி எல்லாம் எடுத்தார்.

Shruti is no longer Sangamithra

மேலும் கேன்ஸ் திரைப்படவிழாவில் சங்கமித்ரா படக்குழு கலந்து கொண்டது. ஸ்ருதியும் கேன்ஸ் விழாவில் கலந்து கொண்டார். இந்நிலையில் ஸ்ருதி படத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இந்த தகவலை தயாரிப்பாளரான தேனாண்டாள் பிலிம்ஸ் உறுதிபடுத்தியுள்ளது. தவிர்க்க முடியாத சூழ்நிலையால் சங்கமித்ரா படத்தில் ஸ்ருதியுடன் பணியாற்ற முடியாமல் போனது என்று தயாரிப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

படத்திற்காக தன்னை தயார்படுத்திய நிலையில் ஸ்ருதி நீக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

English summary
Shruti Haasan is no longer part of Sundar C.'s upcoming movie Sangamithra. Producer of the film has confirmed her exit from the mega budget movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil