ஸ்ருதி ஐஸ்வர்யாவுக்கு தான் தேங்க்ஸ் சொல்லணும்
மும்பை: 3 படத்தில் ஸ்ருதியின் நடிப்பைப் பார்த்த இந்தி இயக்குனர் நிகில் அத்வானி தனது படத்தில் அவரை நடிக்க வைக்க ஒப்பந்தம் செய்துள்ளார்.
மும்பையில் செட்டிலான ஸ்ருதி ஹாஸனுக்கு அவரது ஆசைகள் எல்லாம் நிறைவேறி வருகிறது.

3 படத்தைப் பார்த்த இந்தி இயக்குனர்
ஸ்ருதி, தனுஷுடன் சேர்ந்து நடித்த 3 படத்தை பார்த்த இந்தி இயக்குனர் நிகில் அத்வானிக்கு கமல் மகளின் நடிப்பு பிடித்துவிட்டது.

என் படத்தின் நாயகி ஸ்ருதியே
நிகில் அர்ஜுன் ராம்பல், இர்பானை வைத்து இயக்கும் தனது படத்தில் ஸ்ருதியை நாயகியாக்கியுள்ளார். அதில் ஸ்ருதிக்கு ஆக்ஷன் காட்சிகள் எல்லாம் உள்ளதாம்.

பிரபுதேவாவின் இயக்கத்தில் ஸ்ருதி
ஸ்ருதி தற்போது பிரபுதேவாவின் இயக்கத்தில் சம்திங் சம்திங் இந்தி ரீமேக்கில் நடித்து வருகிறார்.

கைவிட்ட லக், கைகொடுத்த 3
ஸ்ருதி நடித்த முதல் இந்தி படமான லக் ஓடவில்லை. ஆனால் அவர் தமிழில் நடித்த 3 படத்தால் அவர் விரும்பும் பாலிவுட் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.


Click it and Unblock the Notifications











