»   »  லண்டன்காரர் நல்ல நண்பர் மட்டுமே காதலர் இல்லை: ஸ்ருதி ஹாஸன்

லண்டன்காரர் நல்ல நண்பர் மட்டுமே காதலர் இல்லை: ஸ்ருதி ஹாஸன்

Posted By:
Subscribe to Oneindia Tamil
மும்பை: லண்டன் நடிகர் மைக்கேல் கார்செலை காதலிப்பது தொடர்பாக வெளியான செய்திகள் குறித்து ஸ்ருதி ஹாஸன் விளக்கம் அளித்துள்ளார்.

நடிகை ஸ்ருதி ஹாஸன் நடிகர் சித்தார்த்தை காதலித்து லிவ் இன் முறைப்படி வாழ்ந்தார். அவரை பிரிந்த பிறகு ஸ்ருதி சிங்கிளாக இருந்தார். இந்நிலையில் ஸ்ருதியும், லண்டனை சேர்ந்த நாடக நடிகர் மைக்கேல் கார்செலும் காதலிப்பதாக செய்திகள் வெளியாகின.

Shruti talks about Michael Corsale

காதலர் தினத்தை கொண்டாட மைக்கேல் மும்பை வந்தபோது ஸ்ருதியுடன் சேர்ந்து எடுத்த புகைப்படங்கள் வெளியாகின. இருவரும் மூன்று மாதங்களாக காதலித்து வருவதாக கூறப்பட்டது.

இந்நிலையில் இது குறித்து ஸ்ருதி பிரபல ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,

நானும், மைக்கேலும் நல்ல நண்பர்கள். அவ்வளவு தான். நட்பை தாண்டி எங்களுக்குள் எதுவும் இல்லை என தெரிவித்துள்ளார்.

English summary
Actress Shruti Haasan said that Londoner actor Micheal Corsale is just her friend and nothing more than that.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil