மணிரத்னம் படத்தில் ஸ்ருதி ஹாஸன் ஹீரோயின், ஐஸ்வர்யா ராய் வில்லி?
மும்பை: மணிரத்னம் தான் மகேஷ்பாபுவை வைத்து எடுக்கும் படத்தில் நடிக்குமாறு ஸ்ருதி ஹாஸனை கேட்டுள்ளார்.
தோழி ஐஸ்வர்யா இயக்கத்தில் தனுஷுடன் ஜோடி சேர்ந்து நடித்த '3' படத்தை அடுத்து ஸ்ருதி கோலிவுட் பக்கம் இதுவரை வரவில்லை. மும்பையில் வீடு எடுத்து தங்கி இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில் அவர் மீண்டும் தமிழ் படத்தில் நடிக்கவிருக்கிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது.

மணி
இயக்குனர் மணிரத்னம் மகேஷ்பாபுவை வைத்து ஒரு படத்தை எடுத்து அதை தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியிடுகிறார் என்பது அனைவரும் அறிந்த செய்தி.

ஸ்ருதி
தனது படத்தில் நடிக்குமாறு மணிரத்னம் ஸ்ருதி ஹாஸனை கேட்டுள்ளார். ஸ்ருதிக்கும் மணியின் படத்தில் நடிக்க விருப்பம் உள்ளதால் ஓகே சொல்லிவிட்டாராம்.

ஐஸ்வர்யா
மணியின் படத்தில் நாகர்ஜுனா, பஹத் பாசில், ஐஸ்வர்யா ராய் பச்சன் உள்ளிட்டோரும் நடிக்கவிருக்கிறார்கள். ஐஸ்வர்யா குழந்தை பெற்ற பிறகு நடிக்கும் முதல் படம் இது தான்.

வில்லி
படத்தில் ஸ்ருதி மகேஷ்பாபுவுக்கு ஜோடியாக நடிக்கவிருக்கிறார். ஐஸ்வர்யா ராய்க்கு நெகட்டிவ் கேரக்டராம். அப்படி என்றால் ஐஸ் தான் வில்லியா?

உத்தம வில்லன்
ஸ்ருதி ஹாஸன் தனது தந்தை கமல் நடிக்கவிருக்கும் உத்தம வில்லன் படத்தில் நடிக்க டேட்ஸ் இல்லை என்று கூறி வந்த வாய்ப்பை ஏற்க மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications