Don't Miss!
- News சென்னையில் 3 பேர் உயிரிழந்த பப் விபத்து.. 12 பேர் மீது வழக்குப்பதிவு.. இரவோடு இரவாக போலீஸ் அதிரடி
- Finance இனி சுங்கச் சாவடிகளில் நிற்க வேண்டியதில்லை! வருகிறது ஜிபிஎஸ் தொழில்நுட்பம்..!
- Automobiles கார் வாங்குவதிலும் ஆணுக்கு இணையாக பெண்கள்!! புள்ளி விபரம் என்ன சொல்லுது? எந்த ஊரில் அதிகம்?
- Sports வீடியோ- கட்டி பிடிக்க வந்த மலிங்கா.. தள்ளி விட்ட ஹர்திக் பாண்டியா..மும்பை அணியில் என்ன தான் நடக்குது
- Technology ஏர்டெல் காலி.. மாதாந்திரம் ரூ.141 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. 5ஜி டேட்டா.. அன்லிமிட் வாய்ஸ் கால்கள்!
- Lifestyle இந்த 4 பொருள் இருந்தா போதும்.. 1 நிமிடத்தில் சட்னியை செஞ்சுடலாம்.. எப்படி-ன்னு பாருங்க...
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
உடம்பு முழுக்க பச்சை குத்திய ஸ்ருதி ஹாசன் - மொத்தம் 5 இடங்களில்!
சென்னை: நடிகை ஸ்ருதி ஹாசன் பச்சை குத்துவதில் தனி ஆர்வம் கொண்டவர், ஆனந்தம் கொண்டவர். இப்போது இவரது உடலின் 5 இடங்களை விதம் விதமான பச்சை அலங்கரிக்கிறதாம்.
முதலில் முதுகில் தமிழில் பச்சை குத்தியிருந்தார் ஸ்ருதி ஹாசன். தற்போது மேலும் நான்கு விதமான பச்சைகளைக் குத்தி பச்சை ஹாசனாக மாறியுள்ளார்.
நடிகைகள் பச்சை குத்துவது பேஷனாகி வருகிறது. ஹாலிவுட் முதல் கோலிவுட் வரை விதம் விதமான பச்சைகளுடன் நடமாடும் நடிகைகள் பலர்.
ஸ்ருதி ஐந்து:
ஸ்ருதி ஹாசன் முதலில் பச்சை குத்தியது அவரது முதுகில்தான். தமிழில் அதைக் குத்தியுள்ளார்.பின்னர் கையில் ரோஜா பூவை பச்சை குத்திக் கொண்டார். பின்னர் காலிலும் ஒரு பச்சையைப் பதித்தார். தற்போது 5 ஆவது முறையாக தநது கையில் ஒரு பச்சையைப் பதித்துள்ளார்.
திரிஷா மூணு:
திரிஷாதான் இந்த வகையில் முதல்வர், முன்னணியில் இருப்பவர். இவர் தனது மார்பில் நெமோ என்ற மீனைப் பச்சை குத்தி அசத்தியவர். திரிஷாவின் கணக்கு இந்த வகையில் மூன்று பச்சைகளாம்.
அழிக்க அவஸ்தை:
நடிகை நயன்தாரா பிரபுதேவாவை தீவிரமாக காதலித்தபோது தனது கையில் பிரபு என்று பச்சை குத்தினார். காதல் முறிவுக்குப் பின்னர் அதை அழிக்க முடியாமல் அவஸ்தைப்பட்டார்.
நமீதாவோட முதுகு பச்சை:
நமீதா தனது அகன்ற முதுகில் பச்சை குத்தி வைத்துள்ளார்.
ரீமாவின் அழகிய பறவை:
ரீமா சென் தனது கவர்ச்சிகரமான வயிற்றுப் பகுதியில் அழகிய பறவையை பச்சை குத்தி வைத்துள்ளார்.
பச்சை நாயகிகள்:
தமிழ் சினிமாவில் இப்படி பச்சை நாயகியாக வலம் வருவோர் வரிசையில் குஷ்பு, சிம்ரன், சினேகா, பிரியா மணி என பலரை காணலாம் என்பது குறிப்பிடத்தக்க விஷயமாகும்.