»   »  இளம் இயக்குனரை லவ்வும் நடிகை ஸ்வேதா: வைரலான புகைப்படங்கள்

இளம் இயக்குனரை லவ்வும் நடிகை ஸ்வேதா: வைரலான புகைப்படங்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: வளர்ந்து வரும் இயக்குனர் ரோஹித் மிட்டலை இரண்டு ஆண்டுகளாக காதலிப்பதாக தெரிவித்துள்ளார் நடிகை ஸ்வேதா பாசு.

சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருது பெற்ற ஸ்வேதா பாசு வளர்ந்த பிறகு தெலுங்கு, தமிழ் படங்களில் நடித்து வந்தார். இந்நிலையில் கடந்த 2014ம் ஆண்டு ஹைதராபாத்தில் விபச்சார வழக்கில் கைதாகி விடுதலை செய்யப்பட்டார்.

அதன் பிறகு அவர் இந்தி தொலைக்காட்சி தொடரில் நடித்து வருகிறார்.

காதல்

காதல்

வளர்ந்து வரும் பாலிவுட் இயக்குனர் ரோஹித் மிட்டலை கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வருவதாக ஸ்வேதா பாசு தெரிவித்துள்ளார். ரோஹித்துடன் இருப்பதில் மகிழ்ச்சியாக உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

முதல் சந்திப்பிலேயே

முதல் சந்திப்பிலேயே

பிரபல பாலிவுட் இயக்குனர் அனுராக் கஷ்யப் தான் ஸ்வேதாவை ரோஹித்துக்கு அறிமுகம் செய்து வைத்தாராம். ரோஹித்தை பார்த்த உடனேயே ஸ்வேதாவுக்கு பிடித்துவிட்டதாம்.

ரோஹித்

ரோஹித்

ஸ்வேதாவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை ரோஹித் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளன.

கெரியர்

கெரியர்

ஸ்வேதாவும், ரோஹித்தும் காதலில் உறுதியாக இருந்தாலும் தற்போதைக்கு தங்களின் கெரியரில் கவனம் செலுத்த விரும்புகிறார்களாம். அதன் பிறகே திருமணம் பற்றி முடிவு செய்ய உள்ளார்களாம்.

English summary
Actress Shweta Basu said that she is in love with a budding film maker named Rohit Mittal.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil