நான் காதலிப்பது உண்மை தான், ஆனால் சித்தார்த்...? மனம் திறக்கும் சமந்தா

சென்னை: தான் காதலிப்பது உண்மை தான் என்ற போதும், தனது சொந்த விஷயங்களைப் பற்றி வெளிப்படையாக பேச விரும்பவில்லை என தெரிவித்துள்ளார் நடிகை சமந்தா.

தமிழில் மாஸ்கோவின் காவேரி படம் மூலம் அறிமுகமானவர் சமந்தா. ஆனால் தொடர்ந்து தமிழில் ஜொலிக்க முடியாத சமந்தா தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்கிறார்.

தற்போது மீண்டும் தமிழ்ப்பட வாய்ப்புகள் கிடைத்த போதும், கால்ஷீட் இல்லாத காரணத்தால் நிறைய படங்களை தவிர்த்து வந்தார் சமந்தா. ஆனபோதும், சூர்யாவுடன் அஞ்சான் மற்றும் விஜயுடன் கத்தி முதலிட்ட தமிழ்படங்களில் நடித்து வருகிறார் சமந்தா.

இதற்கிடையே இவருக்கும் நடிகர் சித்தார்த்துக்கும் காதல், விரைவில் திருமணம் என கிசு கிசுக்கள் பரவி வருகின்றன.

இது தொடர்பாக சமந்தா செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது :-

காதலிப்பது உண்மை தான்...

காதலிப்பது உண்மை தான்...

என் சொந்த விஷயங்கள் பற்றி வெளிப்படையாக பேச விரும்பவில்லை. நான் காதலிப்பது உண்மைதான். ஆனால் யார் என்று சொல்ல மாட்டேன்.

சித்தார்த் என் நண்பன்...

சித்தார்த் என் நண்பன்...

தெலுங்கு டைரக்டர் திரிவிக்ரம், சித்தார்த் இருவரும் எனக்கு நெருக்கமான நண்பர்கள்.

குழந்தைகளுக்காக திருமணம்...

குழந்தைகளுக்காக திருமணம்...

திருமணம் உடனடியாக செய்து கொள்ள மாட்டேன். நான்கு வருடங்கள் கழித்தே என் திருமணம் நடக்கும். எனக்கு குழந்தைகளை பிடிக்கும். அதற்காகவே திருமணம் செய்வேன்.

கடவுள் கொடுத்த புகழ்...

கடவுள் கொடுத்த புகழ்...

நான் அடிமட்டத்தில் இருந்து வந்தவள். என் குடும்பம் சாதாரணமானது. இந்த பெயர், புகழ் எல்லாமே கடவுள் கொடுத்தது. இதை ஒரு போதும் மறுக்க மாட்டேன்.

சமுகத்துக்கு நல்லது செய்ய வேண்டும்....

சமுகத்துக்கு நல்லது செய்ய வேண்டும்....

தோல் வியாதி வந்த போது எனக்கு தெரியாதவர்களெல்லாம் உதவி செய்தார்கள். சமூகத்துக்கு நிச்சயம் ஏதேனும் ஒருவகையில் என்னால் முடிந்த உதவியை செய்வேன்' என இவ்வாறு சமந்தா தெரிவித்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X