செல்லக்குட்டியை இழந்து வாடும் த்ரிஷா: ஆறுதல் கூறிய சித்தார்த்
சென்னை: த்ரிஷா ஆசையாக வளர்த்த கேட்பரி என்ற நாய் உடல் நலக்குறைவால் இறந்துவிட்டது. இதனால் சோகத்தில் மூழ்கியுள்ள த்ரிஷாவுக்கு நடிகர் சித்தார்த் ஆறுதல் கூறினாராம்.
த்ரிஷா கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சித்தார்த்துடன் சேர்ந்து ஒரு தெலுங்கு படத்தில் நடித்துக் கொண்டிருந்தார். ஹைதராபாத்தில் படப்பிடிப்பு நடந்தது. அப்போது தெருவில் அடிபட்டு படுகாயமடைந்து கிடந்த நாய் ஒன்றை த்ரிஷா காப்பாற்றினார்.
அதற்கு சிகிச்சை அளித்து கடந்த 10 ஆண்டுகளாக தன்னுடனேயே வைத்திருந்தார்.

கேட்பரி
தெருவில் தான் கண்டெடுத்த நாய்க்கு கேட்பரி என்று பெயர் வைத்தார். படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் கேட்பரியுடன் தான் பொழுதை கழிப்பார்.

நாய்கள்
கேட்பரியின் வரவுக்கு பிறகே த்ரிஷா நாய்களை தத்தெடுத்து வளர்ப்பது குறித்து பிறரை அறிவுறுத்த ஆரம்பித்தார். அதன் பிறகு தான் பீட்டாவும் த்ரிஷாவை அணுகியது.

கேட்பரி மரணம்
கேட்பரிக்கு வயிற்றில் கட்டி வந்துள்ளது. அதை அறுவை சிகிச்சை மூலம் அகற்றியுள்ளனர். இந்நிலையில் கேட்பரி மாரடைப்பால் மரணம் அடைந்துவிட்டது.

நான் எப்படி வாழ்வேன்?
கேட்பரி இறந்ததையடுத்து என் செல்லக்குட்டி இல்லாமல் நான் எப்படி வாழ்வேன் என்று த்ரிஷா புலம்புகிறாராம். நான் கேட்பரியை தேடிச் செல்லவில்லை. அது தான் என்னை தேடி வந்தது. தற்போது இப்படி சென்றுவிட்டதே என்கிறாராம்.

சித்தார்த் ஆறுதல்
கேட்பரி தெருவில் அடிபட்டு த்ரிஷாவிடம் வந்தபோது சித்தார்த்தும் அந்த நாய்க்கு மசாஜெல்லாம் செய்துள்ளாராம். அதனால் அவருக்கும் கேட்பரிக்கும் இடையே ஒரு பாசம் ஏற்பட்டுவிட்டதாம். இந்நிலையில் கேட்பரி இல்லாமல் வாடும் த்ரிஷாவுக்கு சித்தார்த் ஆறுதல் கூறினாராம்.


Click it and Unblock the Notifications











