குழந்தை இல்லையானு கேட்டு டார்ச்சர் பண்றாங்க.. கடுப்பான சாந்தினி தமிழரசன்!

சென்னை: சித்து +2 திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை சாந்தினி தமிழரசன். தமிழையும் தாண்டி ஒரு சில தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தற்போது சில படங்களில் நடிக்க கமிட்டாகி வரும் இவர், யூடியூப் சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில் குழந்தை இல்லாயானு கேட்டு டார்ச்சர் பண்றாங்க என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

பாக்யராஜ் எழுதி இயக்கிய சித்து +2 திரைப்படத்தில் சாந்தனுவிற்கு ஜோடியாக நடித்திருந்தார் நடிகை சாந்தினி தமிழரசன். பல ஹிட் படத்தை கொடுத்த பாக்யராஜால் தனது மகன் நடித்த சித்து+2 படத்தை வெற்றிப்படமாக கொடுக்க முடியவில்லை. இப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெற்றுத்தராததால், சில ஆண்டுகள் படவாய்ப்பு இல்லாமல் இருந்தார். இதையடுத்து, நான் ராஜாவாக போகிறேன் படத்தில் நடித்தார். அந்த படம் பெருசாக பேசும்படி இல்லாததால், டோலிவுட்டுக்கு சென்ற சாந்தினி அங்கு ஒரு சில படங்களில் நடித்தார்.

sidhu 12 heroine chandini tamilarasan emotional interview

சாந்தினி தமிழரசன்: அதன் பின் 2018 ஆம் டான்சர் நந்தாவை திருமணம் செய்து கொண்டார். டான்சர் நந்தா தற்போது சீரியலில் நடித்து வருகிறார். திருமணத்திற்கு பிறகு நடிப்பின் மீதான காதல் குறையாததால், விஜய் டிவியில் ஒளிபரப்பான தாழம்பூ சீரியல் மூலம் சின்னதிரையில் நுழைந்து இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்தார். மேலும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரட்டை ரோஜா சீரியலில் நடித்தார். ஒரு சில திரைப்படங்களில் நடித்து வரும் சாந்தினி, இணையத்தில் அவ்வப்போது கவர்ச்சி போட்டோக்களை ஷேர் செய்து ரசிகர்களை திக்கு முக்காட வைத்து வருகிறார்.

குழந்தை இல்லையா: இந்நிலையில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள அவர், பாக்குறவங்க எல்லாரும் கல்யாணம் ஆகி நான்கு வருஷம் ஆச்சே குழந்தை இல்லையா குழந்தை இல்லையானு கேட்டுக்கிட்டே இருக்காங்க, வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு இது ஈஸியா தெரியலாம். ஆனால், குழந்தை பெற்றுக்கொள்ள மனதளவிலும் தயாராக வேண்டும். இது வந்து அவ்வளவு ஈஸியான விஷயம் கிடையாது.

டார்ச்சர் பண்றாங்க: இதனால்,குழந்தை குறித்து யாராவது கேட்டா எரிச்சலா இருக்கும், ஏன் என்றால் அவர்கள் கேட்கும் விதமே வேற மாதிரி இருக்கும். அப்படி கேட்பது நம்ம மேல இருக்கும் அக்கரையில் கேட்க மாட்டாங்க, நம்மை டார்ச்சர் பண்ணுவதற்கான கேட்பார்கள். அப்படி என்கிட்ட யாராவது கேட்டாங்கனா… அவங்களுக்கு எந்த பதிலும் சொல்லாமல் நான் அப்படியே சிரித்துவிட்டு கடந்து விடுவேன். தயவு செய்து இதுபோன்ற கேள்விகளை யாரிடமும் கேட்காதீர்கள் என்று சாந்தினி அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

டான்ஸ் மாஸ்டர் நந்தா: சாந்தினி தமிழரசனின் கணவரான நந்தா, ஜீ தமிழில் கோகுலத்தில் சீதை என்ற சீரியலில் கதாநாயகனாக நடித்து சின்னத்திரையில் அறிமுகம் ஆனார். அந்த தொடரைத் தொடர்ந்து, விஜய் டிவியில் கண்ணே கலைமானே சீரியலில் கதாநாயகனாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. சீரியல் தொடங்கி ஒரு சில மாதங்களில் இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில்,யாரும் எதிர்பார்க்காத வகையில் இவர் திடீரென்று இந்த சீரியலில் இருந்து தான் விலகினார். தற்போது இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒரு சீரியலில் நடித்து வருகிறார். கலாமாஸ்டரின் அசிஸ்டென்டாக இருந்த இவர், ஒரு சில படங்களுக்கு நடன இயக்குநராகவும் இருந்துள்ளார். மேலும் இவர் டான்ஸ் ஸ்கூலை ஒன்றையும் நடத்தி வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X