சிம்புவுக்கு ஜோடி இவரா.. STR 51 பற்றி கசிந்த முக்கிய தகவல்!
சென்னை: 'ஓ மை கடவுளே' மற்றும் 'டிராகன்' படங்களின் மூலம் புகழ்பெற்ற இயக்குநராக மாறி இருக்கிறார் அஸ்வத் மாரிமுத்து. டிராகன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சிம்புவின் 51வது படத்தில் இணைந்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு மே மாதம் தொடங்கப்பட உள்ள, படத்தின் அப்டேட் குறித்த தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
சிம்புவின் அரசன்: அரசன் படத்தின் மூலம் முதன் முதலாக வெற்றிமாறனுடன் இணைந்துள்ளார் சிம்பு. வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படம், வடசென்னை யுனிவர்ஸின் கதைக்குள் கதை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தினை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். அரசன் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு டிசம்பர் மாதம் மதுரை மற்றும் கோவில்பட்டியில் நடைபெற்றன. தயாரிப்பாளர் எஸ்.தாணு படத்தை தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டு இருப்பதால், படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

சிம்புக்கு ஜோடி: அரசன் படத்தில் சமுத்திரக்கனி, ஆண்ட்ரியா ஆகியோர் முதல் பாகத்தை தொடர்ந்து இதிலும் நடித்து வருகின்றனர். விஜய் சேதுபதி இதில் காவல்துறை அதிகாரியாக நடிப்பதாகக் கூறப்படுகிறது. படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். அரசன் படத்தை முடித்து விட்டு சிம்பு அடுத்ததாக அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாக இருக்கும் படத்தில் நடிக்க உள்ளார். பெரும் பொருட்செலவில் உருவாக இருக்கும் இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த படத்தில் நீண்ட ஆண்டுகளுக்கு பின் சிம்பு, சந்தானம் இருவரும் சேர்ந்து நடிக்க உள்ளனர். இருவரும் வாலு படத்தில் கடைசியாக சேர்ந்து நடித்த நிலையில் தற்போது இந்த படத்தில் இருவரும் நடிக்க இருப்பதால், ரசிகர்களின் எதிர்பாப்பு அதிகரித்துள்ளது.
மே மாதம் படப்பிடிப்பு: அதே மட்டுமில்லாமல் காந்தாரா சாப்டர் 1 படத்தில் நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக மாறி இருக்கும் ருக்மணி வசந்த், சிம்புக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என சொல்லப்படுகிறது. அண்மையில் படம் குறித்து பேசி இருந்த அஸ்வத் மாரிமுத்து, மே மாதம் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு தொடங்க இருக்கிறோம். அக்டோபருக்குள் படத்தை முடித்துவிட்டு, அடுத்தாண்டு படத்தை வெளியிட உள்ளதாக கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











