சில்க் ஸ்மிதாவுக்கு புடவை, நகை மீது அவ்வளவு ஆசை.. ஆனா போட்டுட்டு எங்கே போறது?.. ரொம்ப கொடுமை
சென்னை: சில்க் ஸ்மிதாவின் தாக்கம் தென்னிந்திய சினிமாவில் மிகப்பெரியது. அதனால்தான் அவர் இறந்து இத்தனை வருடங்கள் ஆன பிறகும் அவரது இடத்தை இன்னொரு நடிகையால் பிடிக்க முடியவில்லை. அதுமட்டுமின்றி அவர் பற்றிய செய்திகளும், படங்களும் இன்னமும் ரசிகர்களுக்கு ஃபேவரைட்டான ஒன்றாகவே இருக்கிறது. இதிலிருந்தே தெரிந்துகொள்ளலாம் அவர் எவ்வளவு பெரிய வெற்றிடத்தை விட்டு சென்றிருக்கிறார் என்பதை.
சில்க் ஸ்மிதாவை பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. 80ஸ் கிட்ஸ் தொடங்கி இப்போதைய 2கே கிட்ஸ்வரை அனைவருக்குமே அவர் ரொம்பவே விருப்பமானவர். டிவி சேனல்களில் இப்போதும் அவரது பாடல்களையோ அவர் நடித்த படங்களையோ போட்டால் கண் கொட்டாமல் பார்க்கும் ரசிகர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அதுமட்டுமின்றி நான் ஒரு சில்க்கின் ரசிகன் என்று மார்தட்டி பெருமையாக சொல்லும் ரசிகர்களும் இன்றுவரை உண்டு.
அவரிடம் என்ன ஸ்பெஷல்?: பொதுவாக கவர்ச்சி நடிகைகள் தங்களது உடல் அங்கங்களில் கவர்ச்சியை காட்டுவார்கள். ஆனால் சில்க் ஸ்மிதாவோ அப்படி இல்லை. தன்னுடைய உடல் அசைவுகள் மட்டுமின்றி பார்வை, பேச்சு உள்ளிட்டவைகளிலும் நளினத்தை கூட்டி காட்டிய கவர்ச்சி அனைவரையும் கட்டிப்போட்டது. அதனால்தான் அவருடன் நடிக்க அத்தனை ஸ்டார் நடிகர்களும் வரிசையில் காத்திருந்தார்கள். அவர் கடித்து வைத்த பாதி ஆப்பிளை எடுப்பதற்கு அவ்வளவு கூட்டம் கூடியது.

தனிமையில் கொடுமை: சில்க் ஸ்மிதா சம்பாதிக்காத பணம் இல்லை; புகழ் இல்லை. ஆனால் அவர் தன்னை சுற்றி நல்ல மனிதர்களை மட்டும் சம்பாதிக்கவில்லை. இதன் காரணமாக அவர் தன்னைத்தானே சுற்றி ஒரு வேலி போட்டுக்கொண்டார். அந்த வேலியை கடந்து அவருக்கு நெருக்கமானவர்கள் மட்டுமே செல்வதற்கு அனுமதியுண்டு. மற்றவர்களை தூரத்திலேயே நிறுத்திவிடுவார். அதனை பலரும் தலைக்கனம் என்றும் சொன்னார்கள். அவர் அதையெல்லாம் கண்டுகொள்ளவில்லை.
தவறாக நடக்க முயற்சி: அவர் ஒருவரை தீவிரமாக காதலித்ததாகவும்; அந்த நபராலேயே கடைசியில் ஏமாற்றத்தை சந்தித்ததால் சில்க் ஸ்மிதா மனம் உடைந்து தற்கொலை செய்துகொண்டார் என்றும் பேச்சு உண்டு. அவரது உயிரிழப்பு அனைவருக்கும் பெரிய அதிர்ச்சியைத்தான் கொடுத்தது. முக்கியமாக மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலை காண்பதற்கு கூட்டம் அதிகளவு கூடியது மட்டுமின்றி; அந்த உடலை சிலர் தவறான கண்ணோட்டத்துடன் கையாண்ட கொடுமையும் நடந்திருக்கிறது.
அனுராதா பேட்டி: இந்நிலையில் சில்க் ஸ்மிதா பற்றி நடிகையும் அவரது தோழியுமான அனுராதா தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில் அவர், "சில்க் ஸ்மிதாவுக்கு பட்டுப்புடவை கட்டிகொள்ள வேண்டும் என்று ரொம்ப ஆசை. அவரிடம் ஒருமுறை நான், 'உங்களுக்கு புடவை பிடிக்குமா?" என்று கேட்டேன். அதற்கு அவர், 'எனக்கு பட்டு புடவைதான் ரொம்ப பிடிக்கும். ஷூட்டிங் இல்லாதபோது காலையிலேயே பட்டு புடவையை கட்டிக்கொண்டு தலை நிறைய பூ வைத்துக்கொண்டு. இருக்கும் நகைகளை போட்டுக்கொண்டு காலையிலிருந்து மாலைவரை அப்படியே அமர்ந்திருப்பேன். பிறகு இரவு அதை கழற்றிவைத்துவிடுவேன்' என சொன்னதாக குறிப்பிட்டிருந்தார்.
எவ்வளவுதான் சம்பாதித்து பட்டு புடவை, நகையை சேர்த்து வைத்திருந்தாலும் அதை ஆசை தீர போட்டுக்கொண்டு வெளியே நடமாட முடியாமல் போனதும்; அப்படியே போனாலும் அதனை ரசிக்க ஆட்கள் அதிகம் விரும்பாமல்; அளவு குறைந்த உடையில் அவரை ரசிப்பதற்கு விருப்பப்பட்டது சில்க்குக்கு ஏற்பட்ட கொடுமையான நிலைமைதான்.


Click it and Unblock the Notifications











