சில்க் ஸ்மிதாவின் தற்கொலை கடிதம்.. அதில் அவர் எழுதியிருந்தது இதுதான்.. பல வருடங்கள் கழித்து வெளியான சீக்ரெட்
சென்னை: இந்திய அளவில் படு ஃபேமஸான நடிகையாக வலம் வந்தவர் சில்க் ஸ்மிதா. தமிழ் மட்டுமின்றி பிற மொழிகளில் நடித்தும் தனக்கான சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி வைத்திருந்த அவர்; கடந்த 1996ஆம் ஆண்டு தற்கொலை செய்துகொண்டார். அவரது தற்கொலை ஒட்டுமொத்த இந்திய திரையுலகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருந்தது. இந்நிலையில் அவர் தற்கொலை செய்தபோது எழுதிய கடிதத்தில் என்ன இருந்தது என்பது பற்றி தெரியவந்திருக்கிறது.
சில்க் ஸ்மிதாவை ரசிக்காதவர்கள் யாரும் இல்லை. 80ஸ் கிட்ஸ், 90ஸ் கிட்ஸ் தொடங்கி இப்போது வந்திருக்கும் 2கே கிட்ஸ்வரை அனைவருமே சில்க்கின் ரசிகர்கள்தான். அதற்கு காரணம் வெறும் கவர்ச்சி மட்டுமில்லை; அவரிடம் அதையெல்லாம் தாண்டி இன்னொரு சிறப்பு இருந்தது. அது அவரது நளினமான, சிறப்பான நடிப்பு, ஆளை சுண்டி இழுக்கும் கண்கள். அவரது கண்களுக்காகவே பலர் சொக்கிப்போயிருந்தார்கள்.
பெர்சனல் வாழ்க்கையில் பிரச்னைகள்: ஆந்திராவில் பிறந்து தமிழ்நாட்டில் கோட்டை கட்டிய சில்க் ஸ்மிதாவுக்கு திரைத்துறை வாழ்க்கை சிறப்பாக அமைந்தது போன்று பெர்சனல் வாழ்க்கை அமையவில்லை. அவரை எல்லோருமே ஒரு போக பொருளாக மட்டும்தான் பார்த்தார்கள். அதன் காரணமாக அவர் ஏமாறவும் செய்திருக்கிறார். ஒருகட்டத்தில் இனியும் ஏமாறக்கூடாது என்பதற்காக தன்னை சுற்றி ஒரு வேலியை போட்டுக்கொண்டார்.
அது தலைக்கனம் இல்லை: அந்த வேலிக்குள் அவர் யாரை நம்புகிறாரோ அந்த நபர் மட்டும்தான் உள்ளே நுழைய முடியும். மற்றவர்களை பொறுத்தவரை சில்க் அப்படி நடந்துகொண்டது தலைக்கனம் என்றுதான் சொன்னார்கள். ஆனால் அது தலைக்கனம் இல்லை அவருக்கான பாதுகாப்பு என்பதை அவருக்கு நெருக்கமானவர்கள் அறிந்தே வைத்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணம் செய்துகொள்ள ஆசை: தான் திருமணம் செய்துகொண்டு குடும்பமாகி செட்டிலாக வேண்டும் என்பது அவரது ஆசை. சில்க்கின் தேதிகளை பார்த்துக்கொண்டிருந்த ஒரு மருத்துவரின் மகனை அவர் திருமணம் செய்துகொள்ள நினைத்ததாகவும்; அது கைகூடாமல் போனதாகவும் ஒரு பேச்சு உண்டு. அதேபோல் தான் திருமணம் செய்வதாக இருந்த ஒரு நபரின் பெயரையும் நடன அமைப்பாளர் புலியூர் சரோஜாவிடமும் கூறியிருந்தார். ஆனால் திடீரென கடந்த 1996ஆம் ஆண்டு தற்கொலை செய்துகொண்டார் சில்க் ஸ்மிதா.
தற்கொலை கடிதம்: அவர் தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அந்தக் கடிதத்தில் என்ன இருந்தது என்பது தொடர்பாக பத்திரிகையாளர் கோடங்கி தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பேசியிருக்கிறார். அவர் கொடுத்திருந்த அந்தப் பேட்டியில், "சில்க் ஸ்மிதா தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அந்தக் கடிதத்தில், "எல்லோரும் என்னுடைய பணம், பொருளுக்கு ஆசைப்பட்டார்கள். உறவினர்களுக்கு எல்லாம் அவ்வளவு செய்தேன்.இந்த பாபுவை (தேதிகள் பார்த்துக்கொண்டிருந்த மருத்துவ) நான் ரொம்பவே நம்பினேன்.
மன அழுத்தம்: அவருக்கும் நான் ஏகப்பட்டவை செய்தேன். ஆனால் அவ்வளவு செய்தும் மீண்டும் மீண்டும் செய்ய வேண்டும் என சொல்லி என்னை மன அழுத்தத்துக்கு ஆளாக்கிவிட்டார். நான் மன அழுத்தத்துக்குள் சென்றதற்கு அவரும் முதன்மையானவராக இருக்கிறார். நான் நம்பியவர்கள் என்னை ஏமாற்றிவிட்டார்கள். இனி நான் எங்கே போவது. எனது வாழ்க்கையை முடித்துக்கொள்கிறேன்" என தெலுங்கில் அந்தக் கடிதத்தில் எழுதியிருந்தர்" என்றார். இந்தப் பேட்டி ட்ரெண்டாக ஆரம்பித்திருக்கிறது.


Click it and Unblock the Notifications











