சில்லுக்கருப்பட்டி நாயகி சுனைனாவுக்கு திருமணம் ஆகிடுச்சா.. அவரே கூறும் பதிலை பாருங்க!

சென்னை: சுனைனா நடிப்பில் வெளியாகியுள்ள சில்லுக்கருப்பட்டி படம் பிரபலங்கள் மற்றும் ரசிகர்களின் பாராட்டு மழையில் நனைந்து வருகிறது.

ஆண்டின் இறுதியில் வெளியாகியுள்ள இந்த படம் இந்த ஆண்டின் சிறந்த படம் என்ற பாராட்டையும் பல விமர்சகர்களிடம் இருந்து பெற்றுள்ளது.

இந்நிலையில், சுனைனாவுக்கு திருமணம் ஆகிவிட்டது என்று பரவும் வதந்திக்கு அவர் பதிலளித்துள்ளார்.

சுனைனா

சுனைனா

சன் பிக்சர்ஸ் வெளியீட்டில் 2008ம் ஆண்டு வெளியான காதலில் விழுந்துவிட்டேன் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சுனைனா. அந்த படத்தை தொடர்ந்து நகுல் நடிப்பில் வெளியான மாசிலாமணி படத்திலும் அவருக்கு ஜோடியாக நடித்தார். பின்னர், விஷாலின் சமர், விஜய்யின் தெறி, விஜய் ஆண்டனியின் காளி, தனுஷின் எனை நோக்கிப் பாயும் தோட்டா மற்றும் தற்போது வெளியாகியுள்ள சில்லுக்கருப்பட்டி படத்திலும் சுனைனா நடித்துள்ளார்.

வெப் சீரிஸ்

வெப் சீரிஸ்

ஆரம்பத்தில் வாய்ப்பு கிடைத்த அளவுக்கு நடிகை சுனைனாவுக்கு கோலிவுட்டில் அதற்கு பிறகு கிடைக்கவில்லை. இதனால், தனது நடிப்புத் திறமையை வெளிக்காட்டவேண்டும் என நினைத்த அவர், சில வெப் சீரிஸ் தொடர்களில் நடித்து அசத்தினார்.

திருமணம் ஆகிவிட்டதா?

திருமணம் ஆகிவிட்டதா?

நடிகை சுனைனாவுக்கு திருமணம் ஆகிவிட்டதாக எழுந்த வதந்திகள் குறித்து சமீபத்தில் நடந்த பேட்டியில் அவர் பதிலளித்துள்ளார். அதற்கு இன்னமும் எனக்கு கல்யாணம் ஆகலை. அப்படி நடந்தால், அனைவருக்கும் அறிவித்து நல்லா பிரம்மாண்டமாத்தான் பண்ணுவேன் எனக் கூறியுள்ளார்.

பாராட்டு மழை

பாராட்டு மழை

ஹலீதா ஷமீம் இயக்கத்தில் நேற்று வெளியான சில்லுக்கருப்பட்டி திரைப்படத்தை பார்த்த பல பிரபலங்களும் பாராட்டி வருகின்றனர். 4 கதைகளில் கடைசி எபிசோடாக வரும் சமுத்திரகனி, சுனைனா கதைதான் ஹைலைட் என்றும் சுனைனாவின் நடிப்பு அட்டகாசம் என்றும் பாராட்டி வருகின்றனர்.

மீண்டும் நகுலுடன்

மீண்டும் நகுலுடன்

சில்லுக்கருப்பட்டி படத்தைத் தொடர்ந்து மீண்டும் நடிகர் நகுலுடன், 'எரியும் கண்ணாடி' படத்தில் சுனைனா நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குநர் ஆர். கண்ணன் இயக்கி வருகிறார். அடுத்த ஆண்டு இந்த படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

யோகி பாபுவுடன்

யோகி பாபுவுடன்

மேலும், யோகி பாபு, கருணாகரன் நடிப்பில் உருவாகி வரும் 'டிரிப்' படத்திலும் நடிகை சுனைனா நடித்து வருகிறார். டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படம் சயின்ஸ் ஃபிக்‌ஷன் படமாக உருவாகி வருகிறதாம். தொடர்ந்து நல்ல படங்களில் நடித்து வரும் நடிகை சுனைனாவுக்கு இந்த ஆண்டு போலவே அடுத்த ஆண்டும் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்!

More from Filmibeat

Read more about: sunaina சுனைனா
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X