சில்லுனு ஒரு காதல் குட்டி பாப்பாவா இது.. உச்சுகொட்டி ரசித்து பார்க்கும் ரசிகர்கள்!

சென்னை: திரையில் நாம் கண்டு ரசித்த பல குழந்தை நட்சத்திரங்கள் இப்பொழுது படுஜோராக வளர்ந்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்து வருகின்றனர்.

இந்த வகையில் சில்லுனு ஒரு காதல் திரைப்படத்தில் சூர்யாவுக்கு குழந்தையாக நடித்து நம் அனைவரையும் கவர்ந்திருந்த அந்த சுட்டிக் குழந்தை நட்சத்திரமும் இப்பொழுது வளர்ந்து விட்டார்.

Sillunu Oru Kaadhal actress shriya sharma glamorous photos

ஸ்ரேயா சர்மா: இந்நிலையில் அவர் வெளியிடும் பல புகைப்படங்கள் இணையத்தை சுற்றி வரும் நிலையில் இப்பொழுது அனைவரையும் வாய் பிளக்க வைக்கும் சூப்பர் கூல் புகைப்படங்கள் பார்க்கும் அனைவரையும் கட்டி இழுத்து வருகிறது. சிறுவயதிலேயே திரைப்படங்களில் நடிக்க தொடங்கிய நடிகை ஸ்ரேயா சர்மா பல பிரபலமான திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அசத்தியிருப்பார்.

க்யூட் அழகி: தமிழ் சினிமாவில் பேபி ஷாலினி முதல் இப்பொழுது பிரபலமாக இருக்கும் அனிகா சுரேந்திரன் வரை பல குழந்தை நட்சத்திரங்கள் வெள்ளித்திரையில் கலக்கியுள்ளனர். அப்படி படங்களில் நாம் குழந்தை நட்சத்திரமாக பார்த்த முகங்கள் தற்போது ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு வளர்ந்து விட்டார்கள்.

புடவையில்: ஹீரோயின்கள் பலரும் இப்பொழுது பல போட்டோஷூட்களை நடத்தி வரும் அதே சமயம், வளர்ந்த குழந்தை நட்சத்திரங்களும் முன்னணி ஹீரோயின்களுக்கு இணையாக பல போட்டோஷூட்களை நடத்தி வருகிறார்கள். மேலும், அவர்களை பார்க்கும் போது அந்த குழந்தையா இப்படியெல்லாம் போஸ் குடுக்குது என்று கேட்கும் அளவிற்கு உள்ளது. தற்போது இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விதவிதமான புடவையில் அட்டகாசமாக போஸ் கொடுத்துள்ளார். அந்த போட்டோவிற்கு லைக்குகள் குவிந்து வருகிறது.

ஹீரோயினாக: நடிகை ஸ்ரேயா சர்மா சில்லுனு ஒரு காதல் படத்தை தொடர்ந்து எந்திரன் திரைப்படத்தில் ஒரு சில காட்சிகளில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். ஸ்ரேயா சர்மா 2014 ஆம் ஆண்டு வெளியான 'கயாகுடு' என்ற படத்தில் கதாநாயகியாக களமிறங்கினார். இதைத் தொடர்ந்து நிர்மலா கான்வென்ட் படத்தில் நடித்தார். அதன் பிறகு இவருக்கு படவாய்ப்பே இல்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X