ஈஷா யோகா மையத்தில் சூர்யாவின் ரீல் மகள்.. ’சில்லுனு ஒரு காதல்’ பட ஐஸா இது இப்படி வளர்ந்துடுச்சே!
சென்னை: சூர்யா, ஜோதிகா, பூமிகா நடிப்பில் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான சில்லுனு ஒரு காதல் படத்தில் சூர்யா மற்றும் ஜோதிகாவின் ரீல் மகளாக ஐஸ்வர்யா என்னும் கதாபாத்திரத்தில் நடித்த குழந்தை நட்சத்திரம் ஸ்ரேயா சர்மா தற்போது இளம் பெண்ணாக வளர்ந்துள்ள நிலையில், ஈஷா யோகா மையத்தில் ஆதியோகி சிலையின் முன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

சிரஞ்சீவி நடிப்பில் தெலுங்கில் வெளியான ஜெய் சிரஞ்சீவா படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ஸ்ரேயா சர்மா. அந்த படத்தை தொடர்ந்து தமிழில் சில்லுனு ஒரு காதல் படத்தில் நடித்தவர் கன்னடத்தில் சௌந்தர்யா என்னும் படத்திலும் அதன் பின்னர் இந்தி மொழி படங்களிலும் நடிக்க ஆரம்பித்தார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான எந்திரன் படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் பள்ளி மாணவியாக எந்திரன் ரோபோவை பார்க்கும் காட்சியிலும் இவர்தான் நடித்திருப்பார். அதன் பின்னர் இந்தி படங்களில் தொடர்ந்து நடித்து வந்த ஸ்ரேயா சர்மா கடந்த 2015 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான காயகுடு படத்தின் மூலம் ஹீரோயினாகவும் அறிமுகமானார்.

சூர்யாவின் ரீல் மகள்: இயக்குநர் ஒபெலி கிருஷ்ணா இயக்கத்தில் சூர்யா மற்றும் ஜோதிகா நடித்த சில்லுனு ஒரு காதல் படத்தில் சூர்யாவின் முன்னாள் காதலியாக நடித்த பூமிகாவுக்கு வைக்கப்பட்ட ஐஸ்வர்யா என்னும் பெயரையே குழந்தைக்கும் சூட்டியிருப்பார்கள். அந்த படத்தில் செம க்யூட்டாக நடித்து ஏகப்பட்ட ரசிகர்களை அப்போது இவர் கவர்ந்துவிட்டார்.

அனிகா சுரேந்திரனை போல: அனிகா சுரேந்திரன், எஸ்தர் அனில் என பல குழந்தை நட்சத்திரங்கள் ஹீரோயின் லதா தற்போது நடித்து வருகின்றனர். அவர்களுக்கு முன்னோடியாக இவர் ஹீரோயினாக சில படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 27 வயதான ஸ்ரேயா ஷர்மா பில்லு கேமர், நிர்மலா கான்வென்ட் போன்ற படங்களிலும் ஹீரோயினாக நடித்துள்ளார். ஆனால், குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் இது ஒரு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய அளவுக்கு சினிமாவில் ஹீரோயினாக ஷைன் ஆகவில்லை.

ஆதியோகி சிலை முன்: மும்பை மற்றும் ஹைதராபாத் என்றே விசிட் அடித்து வரும் ஸ்ரேயா சர்மா தற்போது தமிழ்நாட்டில் உள்ள ஈஷா யோகா மையத்தில் உள்ள ஆதி யோகி சிலையை தரிசனம் செய்த புகைப்படங்களை தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அவரது போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் செம க்யூட்டாக இருக்காரே என்றும் தமிழில் சீக்கிரம் நடிக்க வாங்க என்றும் கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











