சிம்புவும் நயன்தாராவும் மீண்டும் இணைகிறார்களா?.. அட வேற லெவலா இருக்குமே ப்பா

சென்னை: நயன்தாரா நடிப்பில் அடுத்ததாக டெஸ்ட் திரைப்படம் வெளியாகவிருக்கிறது. அந்தப் படமானது நேரடியாக நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கிறது. இதில் நயனுடன் மீரா ஜாஸ்மின், மாதவன், சித்தார்த் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். சசிகாந்த் இயக்கியிருக்கிறார். அதேபோல் சிம்பு தற்போது தக் லைஃப் படத்தில் நடித்துவருகிறார். மேலும் தேசிங்கு பெரியசாமி, அஸ்வத் மாரிமுத்து, ராம்குமார் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோரின் இயக்கத்திலும் நடிக்கவிருக்கிறார்.

மலையாளத்தில் நடிகையாக தனது திரை பயணத்தை ஆரம்பித்த நயன்தாராவை தமிழ் சினிமா ஐயா படத்தின் மூலம் வரவேற்றது. அந்தப் படம் ஓரளவுக்கு நல்ல விமர்சனத்தை பெற்றது. அதனையடுத்து இரண்டாவது படத்திலேயே ரஜினிக்கு ஜோடியாக சந்திரமுகி படத்தில் நடித்தார் நயன். அப்படம் 800 நாட்களுக்கும் மேல் ஓடி சாதனை படைத்தது. இதனால் முதல் இரண்டு படங்களிலேயே நயன்தாரா முன்னணி நடிகை என்ற இடத்தை பிடித்தார். சிம்பு, விஜய், அஜித், தனுஷ், சூர்யா உள்ளிட்டோருடன் ஜோடி போட்டு நடித்தார்.

Simbu Nayanthara Dragon

காதல் தோல்விகள்: அவர் பீக்கில் இருக்கும்போது சிம்புவுடன் வல்லவன் படத்தில் நடித்தார். அப்போது இரண்டு பேருக்கும் காதல் மலர்ந்தது. ஆனால் திடீரென அந்தக் காதல் பிரேக்கப்பில் முடிந்தது. அந்த சமயத்தில் இரண்டு பேரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி மிகப்பெரிய சர்ச்சைகளை ஏற்படுத்தின. அந்தக் காதல் தோல்விக்கு பிறகு சிங்கிளாக இருந்த அவர்; வில்லு படத்தில் நடித்தபோது இயக்குநரும், நடிகரும், நடன அமைப்பாளருமான பிரபுதேவாவை காதலித்தார்.

விக்கியுடன் திருமணம்: பிரபுதேவா ஏற்கனவே ரமலத் என்கிற பெண்ணை திருமணம் செய்திருந்தார். ஆனால் நயனுடனான காதலுக்காக ரமலத்தை விவாகரத்து செய்தார். நயனும் பிரபுதேவாவுக்காக கிறிஸ்தவ மதத்திலிருந்து ஹிந்து மதத்துக்கு மாறினார். இருப்பினும் அந்தக் காதலும் பிரேக்கப்பில் முடிந்தது. இரண்டு காதல் தோல்விகளுக்கு பிறகு சில காலம் சினிமாவிலிருந்து ஒதுங்கிய அவர் மீண்டும் நடிக்க ஆரம்பித்தார். அப்படி அவர் நானும் ரௌடிதான் படத்தில் நடிக்கையில் விக்னேஷ் சிவனை காதலித்தார். பிறகு திருமணமும் செய்துகொண்டார்.

Simbu Nayanthara Dragon

பிஸி நயன்: திருமணத்துக்கு பிறகு தொடர்ந்து படங்களில் நடித்துவரும் அவர் தற்போது மண்ணாங்கட்டி, ராக்காயி, டெஸ்ட் உள்ளிட்ட படங்களில் கமிட்டாகியிருக்கிறார். அதேபோல் சிம்புவும் தனது இரண்டாவது இன்னிங்ஸில் பிஸியாக இருக்கிறார். மணிரத்னம் இயக்கத்தில் தக்லைஃப் படத்தில் நடிக்கும் அவர் தேசிங்கு பெரியசாமி, அஸ்வத் மாரிமுத்து, ராம்குமார் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோரின் இயக்கத்திலும் நடிக்கவிருக்கிறார். நடிப்பு மட்டுமின்றி டிராகன் படத்தில் ஒரு பாடலும் பாடியிருக்கிறார்.

மீண்டும் சிம்பு, நயன்: இந்நிலையில் புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதாவது அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தி பிரதீப் ரங்கநாதன் நடித்திருக்கும் டிராகன் திரைப்படம் 21ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. இதனையொட்டி ப்ரோமோஷன் நிகழ்ச்சிகள் சூடு பிடிக்க ஆரம்பித்திருக்கின்றன. அந்த வகையில் நாளை நடக்கும் ஒரு ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் சிம்புவும், நயன்தாராவும் கலந்துகொள்ளவிருப்பதாக கூறப்படுகிறது. அஸ்வத் இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருப்பதாலவும்; விக்னேஷ் சிவன் இயக்கத்தில் LIK படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பதாலும் இப்படி ஒரு விஷயம் நடக்க வாய்ப்புகள் கூடி வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறத

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X