'நான் எந்த வம்பு தும்புக்கும் போறதில்ல..' பிக் பாஸ் வீட்டில் சிம்பு ஹீரோயினுக்கு இப்படியொரு பட்டம்!

By

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் அமைதியாக இருந்த சிம்பு பட ஹீரோயினுக்கு ஏகப்பட்ட பாராட்டுகள் கிடைத்துள்ளன.

விஜய் டிவியில் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவோடு ஒளிபரப்பாகி வருகிறது பிக் பாஸ் நிகழ்ச்சி.

இந்த வீட்டில், நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல்ஹாசன் நேற்று அதிரடி அரசியல் பேசினார்.

யோசிச்சு போடுங்க

யோசிச்சு போடுங்க

தலைவரை தேர்ந்தெடுக்கும் முன்பாக, யோசிச்சு ஒட்டுப் போடுங்க என்றார். நான் டபுள் மீனிங்கில்தான பேசுகிறேன். நீங்களும் யோசித்து ஓட்டு போடுங்க என்று பிக்பாஸ் நிகழ்ச்சியை ரசிக்கும் ரசிகர்களைப் பார்த்தும் சொன்னார் கமல். கடந்த ஒரு வார காலமாக சண்டை, சச்சரவுகள் ஒளிபரப்பாகி வந்த நிலையில் கமல் அதிரடி காட்டினார்.

பதவி பற்றி லெக்சர்

பதவி பற்றி லெக்சர்

பிக்பாஸ் வீட்டில், அதிக ஹார்ட் பிரேக் வாங்கிய ஷிவானி, சுரேஷ் சக்கரவர்த்தி, ரேகா ஆகிய மூவரும் இந்த வாரத் தலைவருக்கு போட்டியிட, சுரேஷ் சக்கரவர்த்தி தலைவரானார். அந்த பதவி பற்றி லெக்சர் அடித்த கமல், தலைவர் பதவிங்கறது கடமை, அதை அதிகாரமா நினைக்க வேண்டாம் என்று அட்வைஸ் செய்தார்.

சிம்பு ஹீரோயின்

சிம்பு ஹீரோயின்

தமிழ், பிக்பாஸ் இப்படி கலக்கலாக சென்று கொண்டிருக்க, தெலுங்கு பிக் பாஸ் ஆட்டம் பாட்டம் என கொண்டாட்டத்தில் இருக்கிறது. இதற்கிடையே இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில், சிம்பு ஹீரோயினை பாராட்டித் தள்ளி இருக்கிறார், நிகழ்ச்சியை ஆர்ப்பாட்டமாகத் தொகுத்து வழங்கும் சல்மான் கான்.

பணக்கார ஜாஸ்மின்

பணக்கார ஜாஸ்மின்

தமிழில் கிரிஷ் இயக்கத்தில் சிம்பு நடித்த படம், வானம். தெலுங்கில் வெளியான வேதம் படத்தின் ரீமேக். இந்தப் படத்தில் பரத், அனுஷ்கா, பிரகாஷ் ராஜ் உட்பட பலர் நடித்திருந்தனர். இதில் சிம்புவின் காதலியாக, பணக்கார வீட்டுப் பெண்ணாக நடித்திருந்தவர், ஜாஸ்மின் பாசின். பிரபல மாடலான அவர், இந்தப் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

ஜில் ஜங் ஜக்

ஜில் ஜங் ஜக்

ஆனால் அவருக்கு இந்தப் படத்தில் முக்கியத்துவம் இல்லை. பிறகு கன்னடம், மலையாளப் படங்களில் நடித்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஜில் ஜங் ஜக் படத்தில் நடித்தார். இந்தப் படமும் பெரிய வரவேற்பை பெறவில்லை. இதையடுத்து இந்திக்கு சென்ற ஜாஸ்மின் பாசின், அங்கு சீரியல்களில் நடிக்கத் தொடங்கினார்.

தும்புக்கும்

தும்புக்கும்

நாகினி 4 தொடரில் நயன்தாராவாக நடித்திருந்தார். இந்தி பிக் பாஸ் வீட்டுக்கு சென்றுள்ள, இவர் யாரிடமும் சண்டைப்போடுவதில்லை. அநியாயத்துக்கு அமைதியாக இருக்கிறார். துணி துவைக்கும்போது, பாத்திரங்கள் கழுவும் போதும், 'நான் எந்த வம்பு தும்புக்கும் போறதில்லை' என்ற லெவலிலேயே இருக்கிறார்.

கலாவதி பட்டம்

கலாவதி பட்டம்

இதனால் அவருக்கு மற்ற போட்டியாளர்கள் மத்தியில் நல்ல நேம். இதையடுத்து சல்மான், ஜாஸ்மின் பாசினை பாராட்டித் தள்ளி இருக்கிறார். பிறகு கலாவதி என்ற பட்டத்தைக் கொடுத்த அவர், உங்க குணம் பொதுவா ஓகே. ஆனா, பிக் பாஸூக்காக கொஞ்சம் மாறணும் என்றார். 'சண்டை போடணும் என்கிறாரா சல்மான்? என கேட்கிறார்கள் ரசிகர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X