ரிஷிகேஷ் போன நயன்தாரா… ருத்ராட்ச மாலை அணிந்து வழிபாடு
ரிஷிகேஷ்: டேராடூனுக்கு படப்பிடிப்புக்கு போன நயன்தாரா திடீர் இமயமலைக்கு பயணம் மேற்கொண்டார். அங்குள்ள கோவில்களில் ருத்ராட்ச மாலை அணிந்து வழிபாடு நடத்தியதுதான் இப்போது கோலிவுட்டில் பரபரப்பு தகவலாக உலாவருகிறது.
கடந்த ஆண்டு சிம்பு திடீரென்று ஆன்மீக அவதாரம் எடுத்தார். திடீரென்று புனித ஸ்தலங்கான ரிஷிகேஷ், ஹரிதுவார் ஆகிய இமயமலைப் பிரதேசங்களுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்து வந்தார்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு சிம்பு உடன் பாண்டிராஜ் படத்தில் இணைந்து நடித்து வரும் நயன்தாராவிற்கு ஆன்மீக குருவாக மாறி ஆலோசனை கூறியதால்தான் இந்த திடீர் இமயமலைப் பயணம் என்கின்றனர் நயன்தாராவிற்கு நெருக்கமானவர்கள்.

தொடர் வெற்றிகள்
காதல் தோல்விகளுக்குப் பின்னர் மீண்டும் சினிமாவில் பிஸியான நயன்தாரா, பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். நயன்தாரா சமீபத்தில் நடித்த ராஜா ராணி, ஆரம்பம், வெற்றிகரமாக ஓடின. உதயநிதியுடன் நடித்த இது கதிர்வேல் காதல் படமும் ஓரளவிற்கு நயன்தாராவிற்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது

பிஸியான நயன்தாரா
தற்போது உதயநிதி ஜோடியாக நண்பேன்டா படத்திலும் ஜெயம்ரவி ஜோடியாக பெயரிடப்படாத படமொன்றிலும் நயன்தாரா நடித்து வருகிறார். நண்பேன்டா படப்பிடிப்பு கும்பகோணத்தில் முடிவடைந்ததுள்ளது.

இமயமலை பயணம்
ஜெயம் ரவியுடன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் டேராடூனில் துவங்கியுள்ளது. அங்கு தான் நடிக்க வேண்டிய காட்சிகளை முடித்து கொடுத்து விட்டு நேராக இமயமலை சென்றார்.

காவி, ருத்ராட்ச மாலை
அங்கு உடம்பில் காவி துண்டை போர்த்திக் கொண்டார். நெற்றியில் சந்தனத்தால் சூலாயுதம் வரைந்தார். கழுத்தில் ருத்ராட்ச மாலை அணிந்து கொண்டு ஹரித்வார், ரிஷிகேஷ் பகுதிகளுக்கு ஆன்மீக பயணம் மேற்கொண்டார்.

தியானம் செய்த நயன்தாரா
சப்தரிஷி ஆசிரமத்துக்கு சென்று தியானம் செய்தார். நீலகண்ட மகாதேவர், சப்தசரோவர், லட்சுமணன் சூலம், ரெமிமேபர், கோவில்களுக்கு சென்று சாமி கும்பிட்டார். கார் செல்ல முடியாத இடங்களில் நடந்தே சென்று வழிபட்டார்.

இந்து மதத்தில் நம்பிக்கை
கிருஸ்தவ மதத்தைச் சேர்ந்த நயன்தாரா, மூன்று வருடங்களுக்கு முன்பு சென்னையில் உள்ள ஆர்ய சமாஜத்துக்கு சென்று இந்து மதத்துக்கு மாறினார். அதன் பிறகு இந்து கோவில்களுக்கு சென்று சிறப்பு பூஜை வழிபாடுகள் செய்வதை வழக்கமாக வைத்துள்ளார்.

ஆலய வழிபாடு
எந்த ஊருக்கு படப்பிடிப்புக்கு போனாலும் அங்குள்ள கோவில்கள் பற்றி தெரிந்து கொண்டு நேரில் போய் சாமி கும்பிட்டு வருகிறார். அவ்வாறே டேராடூன் சென்ற அவர் இமயமலைக்கு பயணம் மேற்கொண்டுள்ளார் என்கின்றனர் நயன்தாராவிற்கு நெருக்கமானவர்கள்.

மன அமைதி தேடி
சிம்பு உடன் மீண்டும் நயன்தாரா சேர்ந்து நடிப்பதால் பலவித யூகங்களும், வதந்திகளும் பரவி வரும் நிலையில் மனஅமைதி தேடியே நயன்தாரா ரிஷிகேஷ் பயணம் மேற்கொண்டார் என்றும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











