‘மன்மதன்‘ பட நடிகை சிந்து துலானியை நியாபகம் இருக்கா? சட்டை பட்டனை கழட்டி அட்டகாசம்!
சென்னை: மன்மதன் படத்தில் "காதல் வளர்த்தேன்... காதல் வளர்த்தேன்" என சிம்பு உருகி உருகி காதலித்தவர் தான் நடிகை சிந்து துலானி. அந்த படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த இவர், அந்த படத்திற்கு பிறகு ஆளே காணாமல் போய்விட்டாலும், தமிழ் ஆடியன்ஸ் அவரை மறக்காமல் உள்ளனர். தற்போது சிந்து துலானியின் புது போட்டோ இணையத்தில் வெளியாகி உள்ளது.
நடிகை சிந்து துலானி 1983 ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தார். மாடல் மீது ஈடுபாடு கொண்ட இவர், 2003 ஆம் ஆண்டு தெலுங்குத் திரைப்படமான "ஐதே" மூலம் தனது சினிமாவில் அறிமுகம் ஆனார். அதைத்தொடர்ந்து, மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக நடித்த "அதடு" படத்தில் நடித்து பிரபலமான இவர். அந்த படத்தை தொடர்ந்து, ரமணா இயக்கிய 'சுல்லன்' படத்தில் தனுஷூக்கு ஜோடியாக தமிழில் அறிமுகம் ஆனார். இதைத்தொடர்ந்து 2004 ஆம் ஆண்டு சிம்பு இயக்கிய 'மன்மதன்' படத்தில் நெகட்டிவ் ரோலில் நடித்து பெயர் எடுத்தார். அதன் பின் விக்ரம் நடித்த 'மஜா' படத்தில் நடித்தார். ஆனால், அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாததால், இந்தி பக்கம் சென்றார்.

நடிகை சிந்து துலானி: தெலுங்கு படங்களில் நடித்து வரும் நடிகை சிந்து துலானிக்கு தற்போது 43 வயதாகிறது. புத்தாண்டு விடுமுறையை கொண்டாடும் வகையில் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ள சிந்து துலானி, அங்கு எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படங்களில், குட்டி டவுசர் அணிந்து, மேல்சட்டை பட்டனை கழட்டி விட்டபடி, மிகவும் கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். கடற்கரை பின்னணியில் எடுக்கப்பட்ட இந்த புகைப்படங்கள் ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

43 வயதா? நம்பவே முடியவில்லை:இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், "43 வயதா? நம்பவே முடியவில்லை" என்று கருத்துக்களை பகிர்ந்துள்ளனர். சிந்து துலானி பகிர்ந்து மாலத்தீவு விடுமுறை புகைப்படங்கள், பதிவிட்ட சிறிது நேரத்திலேயே ஆயிரக்கணக்கான லைக்ஸ்களையும் கமெண்ட்ஸ்களையும் குவித்து வருகிறது. இதன் மூலம், மீண்டும் ஒருமுறை ரசிகர்களின் கவனத்தை முழுமையாக தன் பக்கம் திருப்பியுள்ளார் நடிகை சிந்து துலானி.


Click it and Unblock the Notifications











