»   »  வடிவேலுக்கு ஜோடியாக சிம்ரன்!

வடிவேலுக்கு ஜோடியாக சிம்ரன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சூப்பர் நடிகர்களுடன் ஜோடி போட்டு ஒரு காலத்தில் கலக்கிய சிம்ரன், இப்போது காமெடி சூப்பர் ஸ்டார் வடிவேலுவுடன் இணைந்து ஜோடிபோடப் போகிறார்.

இளம் நடிகர்கள் அத்தனை பேருடனும், கமல்ஹாசன், சரத்குமார், அர்ஜூன் என மூத்த ஹீரோக்களுடனும் பெரிய ரவுண்டு அடித்து விட்டு ஒருவழியாக கல்யாணம் செய்து கொண்டு ஓய்ந்த சிம்ரன், குழந்தை பெற்ற பின்னர் உடம்பை டிரிம் ஆக்கிக் கொண்டு மீண்டும் நடிக்க வந்தார்.

வந்த இடத்தில் கணவருக்கும் வாய்ப்பு தர வேண்டும், பெ>ய சம்பளம் தர வேண்டும் என அவர் அடம் பிடித்ததால், யாரும் சிம்ரன் இருக்கும்பக்கமே தலையை வைத்துப் படுக்கப் பயந்தனர்.

இதனால் வாய்ப்பு கிடைக்காமல் டெல்லிக்கும், சென்னைக்குமாக அலை பாய்ந்து கொண்டிருந்தார் சிம்ரன். இந்த நிலையில்தான் இந்திரலோகத்தில்நா. அழகப்பன் படத்திற்காக, வடிவேலுவுக்கு ஜோடியாக நடிக்க ரெடியா என்று கேட்டு சிம்ரனை அணுகியுள்ளனர்.

கோபத்தில் காது இரண்டும் புடைக்க, கண்கள் சிவக்க, என்ன தைரியம் உங்களுக்கு என்று அடிக்காத குறையாக வந்தவர்களை விரட்டிஅனுப்பினார் சிம்ரன்.

ஆனால், பின்னர் அமைதியாக அமர்ந்து யோசித்துப் பார்த்தாரோ என்னவோ.. யாருடன் நடித்தால் என்ன, டப்பு வந்தால் போதாதா என்றுமனசுக்குள் தோன்ற, இந்திரலோகத்தில் நா. அழகப்பன் இயக்குனரைக் கூப்பிட்டு நான் ரெடி என்று சம்மதித்து விட்டாராம். இதனால்இந்திரலோகத்தில்... யூனிட் குஷியாகி விட்டது.

சிம்ரன் நடிக்க வருவதால் பட யூனிட் சந்தோஷப்பட்டாலும் வடிவேலுவுக்கு இன்னும் திருப்தி வரவில்லையாம். காரணம் வேறு. அவர் எய்ம்பண்ணிக் கொண்டிருப்பது மல்லிகா ஷெராவத்தையும், கூடவே ஷில்பா ஷெட்டியையுமாம்.

இருவரும் படத்தில் இருந்தால் அதோட ரேஞ்சே வேறய்யா, டிரை பண்ணிப் பாருங்க, விட்ராதீங்க என்று பட இயக்குநரிடம் படு அக்கறையாகஅறிவுரை சொல்லியுள்ளாராம் வடிவேல்.

பிக் பிரதரைப் பிடித்த மெதப்பில் இருக்கும் ஷில்பாவிடம் இது பற்றி பேசவே பயந்து போய் இருக்கிறாராம் இயக்குனர். அதே நேரத்தில்மல்லிகாவுக்கு பணம் தந்தால் பல்லியுடன் கூட நடிப்பார் என்பதால் அதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கிறார்களாம்.

வடிவேலுவைப் பற்றி ஒரு கொசுறு. பார்ட்டி, பல கெட்டப்களில் பல படங்களில் அசத்தியுள்ள போதிலும், எஸ்.ஜே.சூர்யாவின் வியாபாரி படத்தில்படு அசத்தலான கெட்டப்பில் வருகிறார்.

அதாவது சிலந்தி மனிதனாக (ஸ்பைடர் மேன்தான்!) ஒரு காட்சியில் வருகிறாராம் வடிவேலு. இதை லேட்டஸ்ட் டெக்னாலஜியின் பின்னணியில்அசத்தலாக எடுத்துள்ளார்களாம்.

இந்தக் காட்சி சிறுவர், சிறுமியை பெரிதும் கவருமாம். இதை வைத்தே படத்தை படு ஓட்டம் ஓட்டிப்புடுவோம்ல என்று வியாபாரி யூனிட்குஜாலாகிக் கிடக்கிறதாம்.

அத்தோடு நில்லாமல், இம்சை அரசன் படத்தைப் பார்க்க வந்த சுள்ளான்கள் மற்றும் சுள்ளிகளுக்கு இம்சை மீசையைக் கொடுத்தது போல,படத்துக்கு வரும் சிறுசுகளுக்கும் வடிவேலு ஸ்பைடர் மேன் கோலத்தில் இருக்கும் ஸ்டிக்கரையும் கொடுத்து அசத்தப் போகிறார்களாம்.

என்னா ஒரு ஐடியா!, உக்காந்து யோசிப்பாய்ங்களோ?

Read more about: simran to pair with vadivelu

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil