»   »  இந்தியில் தேடும் சிம்ரன்

இந்தியில் தேடும் சிம்ரன்

Subscribe to Oneindia Tamil
இந்தப் பழம் புளிக்கும் கதையாக தமிழே வேண்டாம் என்று கூறி டெல்லிக்குப் போய்விட்ட சிம்ரன், அங்கிருந்தபடி இந்திப் படங்களில் நடிக்க வாய்ப்பு தேடி வருகிறார்.

பஞ்சாபி ராணி சிம்ரன் தமிழ் சினிமாவில் இருந்த காலத்தில் பெரும் புரட்சியையேஏற்படுத்தினார். அழகு, டான்ஸ், நடிப்பு என அத்தனை ஏரியாக்களிலும் சகநடிகைகளுக்கு பெரும் சவாலாக இருந்தவர் சிம்ரன்.

ராஜு சுந்தரத்துடன் காதல், அப்பாஸுடன் கிசுகிசு, கமலுடன் ஏற்பட்ட நட்பு என இடைஇடையே சிறு சிறு சிராய்ப்புகள் ஏற்பட்டாலும் அதையும் தாண்டி தமிழ் ரசிகர்களைதனது நடிப்பு பிளஸ் அழகான டான்ஸால் கட்டிப் போட்டவர் சிம்ரன்.

திடீரென ஒரு நாள் கல்யாணம் செய்து கொண்டு டெல்லிக்குப் போன சிம்ரன்,குழந்தை பிறந்து பெயர் வைத்த பின்னரே சென்னைக்குத் திரும்பினார்.

கணவருடன் வந்து ஹோட்டலில் முகாமிட்டு மீண்டும் நடிக்க வாய்ப்பு தேடியசிம்ரனுக்கு கிடைத்தது ஏமாற்றமே. காரணம் கணவருக்கும் சேர்த்தே அவர் வாய்ப்புகேட்டதால் கோலிவுட் தயாரிப்பாளர்கள் காத தூரம் ஓடிப் போனார்கள்.

இந்த நேரத்தில்தான் வந்து சேர்ந்தது சட்டசபைத் தேர்தல். அதிமுகவுக்காக பிரசாரம்செய்தால் செம டப்பு தரப்படும் என கூறப்பட்ட ஆசை வார்த்தைக்கு மயங்கிஅதிமுகவுக்காக தீவிரப் பிரசாரம் செய்தார். ஆனால் சொன்னபடி காசுதான் முழுசாகவந்து சேரவில்லை என்கிறார்கள்.

அதைக் கேட்கவும் முடியாது என்பதால் கடுப்பாகிப் போன சிம்ரன் இனியும் இங்கேஇருந்தால் சரிப்பட்டு வராது என்பதை உணர்ந்து இப்போது சென்னையைக் காலிசெய்து விட்டு டெல்லிக்குப் போய் விட்டார்.

அங்கிருந்தபடியே இந்திப் படங்களில் சான்ஸ் தேடி வருகிறார். இதற்காக அடிக்கடிமும்பைக்கும் பறக்கிறாராம்.

இப்போதும் கணவரை அவர் விட்டு விடவில்லை. இரண்டு பேருக்குமாக சேர்த்தேவாய்ப்பு கேட்டு வரும் சிம்ரன், இதற்காக எனக்கு மட்டும் சம்பளம் கொடுத்தால்போதும், ஊட்டுக்காரர் ஃப்ரீயாகவே நடிப்பார் எனவும் கூறி வருகிறாராம்.

ஆனாலும் இதுவரை ஒரு வாய்ப்பும் கிடைத்தபாடில்லை. முதலில் இந்தியில் இருந்து தான்சிம்ரன் தமிழுக்கு வந்தார் என்பது உங்களுக்கு நினைவிருக்கும்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil