»   »  மீண்டும் நடிக்க வரும் சிம்ரன்

மீண்டும் நடிக்க வரும் சிம்ரன்

Subscribe to Oneindia Tamil

ஸ்லிம் கேர்ள் சிம்ரன், குடும்பப் பெண்ணாக மாறி, குழந்தைக்குத் தாயான பின்னர் சின்ன இடைவெளிக்குப்பிறகு மீண்டும் நடிக்க வருகிறார். தெலுங்கில் அவர் பாலகிருஷ்ணா படம் மூலம் ரீ என்ட்ரி கொடுக்கிறார்.

உடுக்கு இடை, மிடுக்கு நடை, துடுக்கு நடிப்பு கலக்கு கலக்கியவர் சிம்ரன். ஏகப்பட்ட படங்களும், குண்டக்கமண்டக்க வதந்திகளுமாக கோலிவுட்டைக் கலக்கிக் கொண்டிருந்த சிம்ரன் திடீரென கல்யாணம் செய்து கொண்டுசெட்டிலாகிப் போனார்.

திருமணத்திற்குப் பிறகு குழந்தை பெறும் வரை மீண்டும் நடிப்பதில்லை என்ற முடிவில் இருந்தார் சிம்ரன். ஆனால்குழந்தை பெற்ற பின்னர் மீண்டும் நடிக்க ஆர்வம் காட்டினார். தயாரிப்பாளர்களும் தேடிச் சென்றனர். ஆனால்கூடவே கணவருக்கும் வாய்ப்பு தர வேண்டும் என அவர் கண்டிஷன் போட்டதால் போனவர்கள் எல்லாம் அதேவேகத்தில் திரும்பி விட்டனர்.

இதனால் நடிக்கும் வாய்ப்பு கிடைக்காமல் சென்னையில் கொஞ்ச நாள் சும்மா டேரா போட்டிருந்தார் சிம்ரன்.அந்த சமயத்தில் சட்டசபைத் தேர்தல் வரவே அதிமுகவுக்காக பொட்டியை வாங்கிக் கொண்டு மைக் பிடித்துபிரசாரம் செய்தார் சிம்ரன். ஆனால் சொன்ன பணத்தைக் கொடுக்காததால் அப்செட் ஆகிப் போனார் சிம்ரன்.

இனிமேலும் இலவு காக்க முடியாது என்று கருதிய சிம்ரன் மீண்டும் டெல்லிக்குத் திரும்பிப் போனார். இப்போதுசிறிய இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் தனது நடிப்பு முயற்சியை தீவிரமாக்கியுள்ளார் சிம்ரன். இம்முறைதெலுங்குப் பக்கம் தேட்டையை ஆரம்பித்துள்ளார்.

அவரது முயற்சிக்குப் பலன் கிடைத்துள்ளது. பாலகிருஷ்ணா நடிக்கவுள்ள ஒக்க மகடு என்ற படத்தில் சிம்ரன்நடிக்க புக் ஆகியுள்ளாராம். ஆனால் ஹீரோயினாக அல்ல. சிம்ரனை விட இரண்டு மடங்கு வயது கொண்டபாலகிருஷ்ணாவுக்கு ஜோடிகளாக அவரை விட நான்கு மடங்கு வயது குறைந்த அனுஷ்காவும், அமோகாவும்ஜோடி போடுகிறார்கள்.

சிம்ரனுக்கு என்ன வேடம் என்பதை இன்னும் அவரிடம் கூட சொல்லவில்லையாம். முக்கிய வேடம் என்றுகூறியுள்ளார்களாம். அனேகமாக பாலகிருஷ்ணாவுக்கு அக்கா அல்லது அம்மாவாக சிம்ரன் நடிக்கக் கூடும்என்கிறார்கள்.

அப்படியே தமிழிலும் அம்மா, அக்கா வேடங்களுக்கு சிம்ரன் ஓ.கே. சொன்னால் ஒரு காலத்தில் ஜோடியாகநடித்த அஜீத், விஜய், சூர்யாவுக்கு அக்கா அல்லது அம்மா வேடத்தில் நடிக்க வைக்க தமிழ்த் திரைப்படத்தயாரிப்பாளர்களும் தயாராகவே இருக்கிறார்கள்.

சினிமாவில் இதெல்லாம் ரொம்ப சகஜம்.

Read more about: simran to act again
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil