twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சிம்ரன் தரும் சங்கடம் சென்னை நகர தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக கூட்டணி வேட்பாளர்களைஆதரித்து நடிகை சிம்ரன் இன்று மீண்டும் பிரசாரம் செய்கிறார்.அதிமுகவில் சேர்ந்துள்ள சிம்ரன் அக்கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம்செய்து வருகிறார். சென்னையில் ஒரு சுற்று பிரசாரத்தை முடித்து விட்ட அவர்தற்போது தனது 2வது கட்டப் பிரசாரத்தைத் தொடங்கியுள்ளார்.இதற்கிடையே சிம்ரன் பிரச்சாரத்துக்கு வர கூடுதலாகப் பணம் கேட்பதால் அதிமுகவில் சிக்கல் எழுந்துள்ளதாகக்கூறப்படுகிறது. இப்போது ஒரு கூட்டத்துக்கு ரூ. 25,000 தரப்பட்டு வருகிறது. ஆனால், இனிமேல் ரூ. 35,000 தந்தால் தான்வருவேன் என்று சிம்ஸ் அடம் பிடிப்பதாகக் கூறப்படுகிறது.மேலும் இரண்டாம் நிலை நகர்களில் தனக்கு தங்குவதற்கு நல்ல ஹோட்டல்கள் இல்லாததால் அங்கு செல்லவும்சிம்ரன் மறுத்து வருகிறார். இதையடுத்து முக்கிய நகரங்களுக்கு மட்டுமே சிம்ரனை அழைப்பது என முடிவுசெய்யப்பட்டுள்ளது.கிராமப் பகுதிகளில் தான் சிம்ரனில் பிரச்சாரத்துக்கு ஏதாவது பலன் இருக்கும் என்பதால் அவரை அப் பகுதிக்குக்கொண்டு செல்ல உளவுப் பிரிவு அதிமுகவினரிடம் கூறுகிறது. ஆனால், சிம்ரன் அங்கெல்லாம் போக மறுப்பதால்சிக்கல் எழுந்துள்ளது.இந் நிலையில் இன்று மாலை சென்னையில் அவர் பிரச்சாரம் செய்கிறார்.சைதாப்பேட்டை தொகுதியிலிருந்து தனது பிரசாரத்தைத் தொடங்குகிறார். தியாகராயநகர், மைலாப்பூர், ஆயிரம் விளக்கு ஆகிய இடங்களில் வேனில் இருந்தபடி வீதிவீதியாக சென்று பிரசாரம் செய்கிறார்.திருவல்லிக்கேணி தொகுதியில் வீடு வீடாக நடந்து சென்று பிரசாரம்மேற்கொள்ளவுள்ளார். அப்பகுதியில் முஸ்லீம்கள் அதிகம் உள்ளதால் இந்தியில் பேசிவாக்கு சேகரிக்கவுள்ளார். சேப்பாக்கம் தொகுதியிலும் அவர் வீது வீதியாக சென்றுஓட்டு கேட்கிறார்.இதைத் தொடர்ந்து எழும்பூர், அண்ணா நகர் ஆகிய தொகுதிகளில் மதிமுகவேட்பாளர்களுக்கு ஆதரவாக ஓட்டு கேட்கவுள்ளார். பின்னர் ஆர்.கே.நகர், ராயபுரம்ஆகிய தொகுதிகளில் மீண்டும் ஓட்டு கேட்கிறார்.

    By Staff
    |
    சென்னை நகர தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக கூட்டணி வேட்பாளர்களைஆதரித்து நடிகை சிம்ரன் இன்று மீண்டும் பிரசாரம் செய்கிறார்.

    அதிமுகவில் சேர்ந்துள்ள சிம்ரன் அக்கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம்செய்து வருகிறார். சென்னையில் ஒரு சுற்று பிரசாரத்தை முடித்து விட்ட அவர்தற்போது தனது 2வது கட்டப் பிரசாரத்தைத் தொடங்கியுள்ளார்.

    இதற்கிடையே சிம்ரன் பிரச்சாரத்துக்கு வர கூடுதலாகப் பணம் கேட்பதால் அதிமுகவில் சிக்கல் எழுந்துள்ளதாகக்கூறப்படுகிறது.

    இப்போது ஒரு கூட்டத்துக்கு ரூ. 25,000 தரப்பட்டு வருகிறது. ஆனால், இனிமேல் ரூ. 35,000 தந்தால் தான்வருவேன் என்று சிம்ஸ் அடம் பிடிப்பதாகக் கூறப்படுகிறது.

    மேலும் இரண்டாம் நிலை நகர்களில் தனக்கு தங்குவதற்கு நல்ல ஹோட்டல்கள் இல்லாததால் அங்கு செல்லவும்சிம்ரன் மறுத்து வருகிறார். இதையடுத்து முக்கிய நகரங்களுக்கு மட்டுமே சிம்ரனை அழைப்பது என முடிவுசெய்யப்பட்டுள்ளது.

    கிராமப் பகுதிகளில் தான் சிம்ரனில் பிரச்சாரத்துக்கு ஏதாவது பலன் இருக்கும் என்பதால் அவரை அப் பகுதிக்குக்கொண்டு செல்ல உளவுப் பிரிவு அதிமுகவினரிடம் கூறுகிறது. ஆனால், சிம்ரன் அங்கெல்லாம் போக மறுப்பதால்சிக்கல் எழுந்துள்ளது.

    இந் நிலையில் இன்று மாலை சென்னையில் அவர் பிரச்சாரம் செய்கிறார்.சைதாப்பேட்டை தொகுதியிலிருந்து தனது பிரசாரத்தைத் தொடங்குகிறார். தியாகராயநகர், மைலாப்பூர், ஆயிரம் விளக்கு ஆகிய இடங்களில் வேனில் இருந்தபடி வீதிவீதியாக சென்று பிரசாரம் செய்கிறார்.

    திருவல்லிக்கேணி தொகுதியில் வீடு வீடாக நடந்து சென்று பிரசாரம்மேற்கொள்ளவுள்ளார். அப்பகுதியில் முஸ்லீம்கள் அதிகம் உள்ளதால் இந்தியில் பேசிவாக்கு சேகரிக்கவுள்ளார். சேப்பாக்கம் தொகுதியிலும் அவர் வீது வீதியாக சென்றுஓட்டு கேட்கிறார்.

    இதைத் தொடர்ந்து எழும்பூர், அண்ணா நகர் ஆகிய தொகுதிகளில் மதிமுகவேட்பாளர்களுக்கு ஆதரவாக ஓட்டு கேட்கவுள்ளார். பின்னர் ஆர்.கே.நகர், ராயபுரம்ஆகிய தொகுதிகளில் மீண்டும் ஓட்டு கேட்கிறார்.

      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X