தெலுங்குக்கு தாவும் சிம்ரன் திடீர் திருமணம், தொடர்ந்து குழந்தை, அதிரடியாக அம்மாவுக்காக பிரசாரம் என தூள்கிளப்பிய சிம்ரன் இப்போது தெலுங்கில் காலடி எடுத்து வைத்துள்ளார்.தமிழில் தன்னை புக் செய்ய வந்தவர்களிடம் எல்லாம் கணவருக்கும் சேர்த்து ஹீரோசான்ஸ் கேட்டு தமிர் செய்த சிம்ரனுக்கு கோலிவுட் பை பை சொல்லிவிட்டது.சுத்தமாக வாய்ப்பிழந்து போய் விட்ட நிலையில் டாக்டர் ராஜசேகர் மூலமாகதெலுங்குப் பட வாய்ப்பு அவரைத் தேடி வந்துள்ளது. ஸோ, தமிழை விட்டு விட்டுஹைதரபாத்துக்குப் பறக்கிறார் சிம்ரன்.இடையழகி எனப் பெயர் பெற்ற சிம்ரன் திடீரென கல்யாணம் செய்து கொண்டுபோனது அவரது ரசிகர்களைப் பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. போன வேகத்தில் ஒருஅழகான குழந்தைக்கும் அம்மா ஆனார் சிம்ரன். மீண்டும் சினிமாவில் நடிப்பேன்என்று குழந்தை பிறந்த பின்னர் அறிவித்தார் சிம்ரன்.சொன்னதோடு இல்லாமல் தனது உடல் அழகை பெருக்கிக் கொண்டு ஸ்லிம்மாகமீண்டும் சென்னை வந்தார். சென்னையில் ஹோட்டலில் தங்கியபடி வாய்ப்பு தேடஆரம்பித்தார்.எனக்கும், எனது கணவருக்கும் வாய்ப்பு கொடுங்கள் என்று சிம்ரன் அனத்தியதால்அவரைத் தேடிப் போன ஒன்று இரண்டு தயாரிப்பாளர்களும் ஜகா வாங்கி விட்டனர்.இதனால் வாய்ப்பு இல்லாமல் வாடிப் போன சிம்ரனுக்கு அதிமுக ரூபத்தில் பேருதவிகிடைத்தது. அதிமுகவுக்கு ஆதரவாக ஆங்காங்கே பிரசாரம் செய்தார் சிம்ரன்.இதற்காக செமத்தியான டப்பும் கிடைத்தது.ஆனால் சிம்ரனின் நேரமோ, என்னவோ அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரவில்லை.திமுக ஆட்சிக்கு வந்து விட்டது.இதனால் சிம்ரனுக்கு பயமாகி விட்டதாம். திமுகவினரால் தனக்குப் பிரச்சினைவருமோ என்று பயந்தபடி ஹோட்டலுக்குள்ளேயே தனது கணவருடன் சில நாள்முடங்கிக் கிடந்துவிட்டு டெல்லிக்குப் போய்விட்டார்.இந் நிலையில் பழைய நடிகை ஜீவிதா ரூபத்தில் சிம்ரனுக்கு நிம்மதி வந்துசேர்ந்துள்ளது. ஜீவிதாவின் கணவரான டாக்டர் ராஜசேகர் தெலுங்கில் ஒரு படத்தைத்தயாரித்து, இயக்கவுள்ளார்.மலையாளத்தில் வெளியான லயன் படத்தை தெலுங்கில் ரீமேக் செய்கிறார் ராஜசேகர்.இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஒரு புள்ளையும் முன்வரவில்லையாம். எல்லாம் ராஜசேகரின் வயசுதான் காரணம்.மூத்த, முதியவரான அவருடன் நடித்தால் அம்புட்டுத்தான் என்று பயந்து போன இளம்நாயகிகள் ஓடி ஒளிந்து விட்டார்கள்.இந் நிலையில்தான் சிம்ரனைக் கேட்டுப் பார்க்கலாம் என்று ஜீவிதா, சிம்ரனைஅணுகினார். நடிக்க முடியுமா என்று கேட்டுள்ளார் ஜீவிதா, இப்பவே கிளம்பிட்டேன்என்று பரவசத்துடன் ஓ.கே. சொல்லி விட்டாராம் சிம்ரன்.விரைவில் ராஜசேகருடன் நடிப்பதற்காக வீட்டுக்காரர், குழந்தையுடன் ஹைதராபாத்பறக்க உள்ளார் சிம்ரன். இனிமேல் என்ன மாதிரியான வாய்ப்புகள் வந்தாலும் அதைவிடாமல் பிடித்துக் கொள்ள முடிவு செய்துள்ளாராம் சிம்ரன்.கணவருக்கும் வாய்ப்பு தாங்க என்று இனிமேல் யாரையும் அனத்தவும் மாட்டாராம்.எப்படி இருந்த சிம்ரன் இப்படி ஆயிட்டாரே...
திடீர் திருமணம், தொடர்ந்து குழந்தை, அதிரடியாக அம்மாவுக்காக பிரசாரம் என தூள்கிளப்பிய சிம்ரன் இப்போது தெலுங்கில் காலடி எடுத்து வைத்துள்ளார்.
தமிழில் தன்னை புக் செய்ய வந்தவர்களிடம் எல்லாம் கணவருக்கும் சேர்த்து ஹீரோசான்ஸ் கேட்டு தமிர் செய்த சிம்ரனுக்கு கோலிவுட் பை பை சொல்லிவிட்டது.
சுத்தமாக வாய்ப்பிழந்து போய் விட்ட நிலையில் டாக்டர் ராஜசேகர் மூலமாகதெலுங்குப் பட வாய்ப்பு அவரைத் தேடி வந்துள்ளது. ஸோ, தமிழை விட்டு விட்டுஹைதரபாத்துக்குப் பறக்கிறார் சிம்ரன்.
இடையழகி எனப் பெயர் பெற்ற சிம்ரன் திடீரென கல்யாணம் செய்து கொண்டுபோனது அவரது ரசிகர்களைப் பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. போன வேகத்தில் ஒருஅழகான குழந்தைக்கும் அம்மா ஆனார் சிம்ரன். மீண்டும் சினிமாவில் நடிப்பேன்என்று குழந்தை பிறந்த பின்னர் அறிவித்தார் சிம்ரன்.
சொன்னதோடு இல்லாமல் தனது உடல் அழகை பெருக்கிக் கொண்டு ஸ்லிம்மாகமீண்டும் சென்னை வந்தார். சென்னையில் ஹோட்டலில் தங்கியபடி வாய்ப்பு தேடஆரம்பித்தார்.
எனக்கும், எனது கணவருக்கும் வாய்ப்பு கொடுங்கள் என்று சிம்ரன் அனத்தியதால்அவரைத் தேடிப் போன ஒன்று இரண்டு தயாரிப்பாளர்களும் ஜகா வாங்கி விட்டனர்.
இதனால் வாய்ப்பு இல்லாமல் வாடிப் போன சிம்ரனுக்கு அதிமுக ரூபத்தில் பேருதவிகிடைத்தது. அதிமுகவுக்கு ஆதரவாக ஆங்காங்கே பிரசாரம் செய்தார் சிம்ரன்.இதற்காக செமத்தியான டப்பும் கிடைத்தது.
ஆனால் சிம்ரனின் நேரமோ, என்னவோ அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரவில்லை.திமுக ஆட்சிக்கு வந்து விட்டது.
இதனால் சிம்ரனுக்கு பயமாகி விட்டதாம். திமுகவினரால் தனக்குப் பிரச்சினைவருமோ என்று பயந்தபடி ஹோட்டலுக்குள்ளேயே தனது கணவருடன் சில நாள்முடங்கிக் கிடந்துவிட்டு டெல்லிக்குப் போய்விட்டார்.
இந் நிலையில் பழைய நடிகை ஜீவிதா ரூபத்தில் சிம்ரனுக்கு நிம்மதி வந்துசேர்ந்துள்ளது. ஜீவிதாவின் கணவரான டாக்டர் ராஜசேகர் தெலுங்கில் ஒரு படத்தைத்தயாரித்து, இயக்கவுள்ளார்.
மலையாளத்தில் வெளியான லயன் படத்தை தெலுங்கில் ரீமேக் செய்கிறார் ராஜசேகர்.
இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஒரு புள்ளையும் முன்வரவில்லையாம். எல்லாம் ராஜசேகரின் வயசுதான் காரணம்.
மூத்த, முதியவரான அவருடன் நடித்தால் அம்புட்டுத்தான் என்று பயந்து போன இளம்நாயகிகள் ஓடி ஒளிந்து விட்டார்கள்.
இந் நிலையில்தான் சிம்ரனைக் கேட்டுப் பார்க்கலாம் என்று ஜீவிதா, சிம்ரனைஅணுகினார். நடிக்க முடியுமா என்று கேட்டுள்ளார் ஜீவிதா, இப்பவே கிளம்பிட்டேன்என்று பரவசத்துடன் ஓ.கே. சொல்லி விட்டாராம் சிம்ரன்.
விரைவில் ராஜசேகருடன் நடிப்பதற்காக வீட்டுக்காரர், குழந்தையுடன் ஹைதராபாத்பறக்க உள்ளார் சிம்ரன். இனிமேல் என்ன மாதிரியான வாய்ப்புகள் வந்தாலும் அதைவிடாமல் பிடித்துக் கொள்ள முடிவு செய்துள்ளாராம் சிம்ரன்.
கணவருக்கும் வாய்ப்பு தாங்க என்று இனிமேல் யாரையும் அனத்தவும் மாட்டாராம்.
எப்படி இருந்த சிம்ரன் இப்படி ஆயிட்டாரே...


Click it and Unblock the Notifications