»   »  சிம்ரனுக்கு ஆப்பு!

சிம்ரனுக்கு ஆப்பு!

Subscribe to Oneindia Tamil

தமிழில் கலகலத்துப் போன சிம்ரனுக்கு தெலுங்கில் கிடைத்த ஒரே ஒரு வாய்ப்பும்கையை விட்டுப் போய் விட்டதாம். இதனால் பஞ்சாப் ராணி சிம்ரன் அப்செட்ஆகியுள்ளார்.

கோலிவுட்டின் இணையற்ற இடை அழகியாக கலக்கி வந்த சிம்ரன் திடீரெனகல்யாணம் செய்து கொண்டு டெல்லிக்குப் பறந்தார். குழந்தையும் பிறந்தது. மீண்டும்வருவேன் என்று கூறியிருந்த சிம்ரன் சொன்னதுபோல உடம்பை டிரிம் ஆக்கிக்கொண்டு மீண்டும் கோலிவுட் திரும்பினார்.

கணவருடன் ஹோட்டலில் தங்கியிருந்து வாய்ப்பு தேடி வந்தார் சிம்ரன். ஆனால்தனக்கு மட்டும் இல்லாமல், கணவருக்கும் சேர்த்து நடிக்க வாய்ப்பு கேட்டதால்தயாரிப்பாளர்கள் ஜகா வாங்கி ஓடினர்.


இனால் ஒரு படம் ஆப்படாமல் சிம்ரன் சோகத்தில் கிடந்தார்.

இந்த நேரம் பார்த்து குறுக்கிட்ட சட்டசபைத் தேர்தல் சிம்ரனுக்கு புது வாழ்வுகொடுத்தது. அதிமுகவுக்காக பிரசாரம் செய்தால் செம துட்டு என்று ஆசைகாட்டப்பட்டதால் அதிமுகவுக்கு ஆதரவாக பிரசாரத்தில் குதித்தார்.

இதில் நல்ல துட்டு கிடைத்ததாம். ஆனால் பேசியபடி முழுத் தொகையையும்சிம்ரனிடம் கொடுக்காமல் இடையில் சிலர் அமுக்கி விட்டனராம்.

ஆனால் பாவம், அதிமுக தோற்று திமுக ஆட்சிக்கு வந்து விட்டது. இதனால்சிம்ரனுக்கு வாய்ப்பு கொடுத்தால் அய்யாவின் கோபத்துக்கு ஆளாகி விடுவோமோஎன்று பயந்து தமிழ் சினிமாவில் சிம்ரனுக்கு வாய்ப்பு கொடுக்க யாரும்முன்வரவில்லை.


பேசாமல் டெல்லிக்கே போய் விடுவோமா என்று சிம்ரன் யோசித்துக் கொண்டிருந்தநேரம் பார்த்து தெலுங்கிலிருந்து அவருக்கு அழைப்பு வந்தது. டாக்டர் ராஜசேகர்சொந்தமாக தயாரிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு அது.

இதனால் சந்தோஷப்பட்டுப் போன சிம்ரன் கணவருடன் ஹைதராபாத்துக்குப்பறந்தார். அங்கு என்ன நடந்ததோ, தெரியவில்லை, இப்போது அப்படத்தில் சிம்ரன்இல்லையாம்.

சிம்ரன் ஏன் படத்திலிருந்து நீக்கப்பட்டார் என்பது யாருக்கும் புரியவில்லை.ராஜசேகரும் காரணத்தைச் சொல்லவில்லை. ஆனால் கிளாமராக நடிக்க வேண்டும்என்று ராஜசேகர் சிம்ரனிடம் கேட்டுக் கொண்டதாகவும், இதைக் கேட்டு அதிர்ச்சிஅடைந்த சிம்ரன் கிளாமர் எல்லாம் முடியாது, கேரக்டர் ரோலாக இருந்தால்பரவாயில்லை என்று கூறியுள்ளார்.

ஆனால் கதைப்படி நீங்கள் கிளாமர் காட்டியே ஆக வேண்டும், அப்படி முடியாதுஎன்றால் ஸாரி என்று சொல்லி சிம்ரனை அனுப்பி வைத்து விட்டாராம் ராஜசேகர்.


ஆனால் சிம்ரன் உடம்பு குண்டாக இருப்பதால்தான் அவரை நீக்கியதாக ராஜசேகர்தரப்பிலிருந்து செய்திகள் கசிய விடப்படுகிறது.

சிம்ரனை நீக்கிய ராஜசேகர், நயனதாரா, ஷ்ரேயா ஆகியோரை அணுகிப் பார்த்தார்.

இருவரும் கால்ஷீட் இல்லை என்று கூறி விட்டார்களாம். இதையடுத்து மலையாளமாய மோகினி சம்விருத்தா இந்த ரோலில் நடிக்கவிருப்பதாக தெரிகிறது.

ஏற்கனவே டோலிவுட்டில் ராஜசேகரின் டப்பா டான்ஸ் ஆடி வருகிறது. இதனால்தான்அவருடன் நடிக்க பல முன்னணி நடிகைகள் மறுத்து விட்டார்கள். இதனால்தான் அவர்சிம்ரனை தேடிப் பிடித்தார்.

இப்போது அவரும் போய் விட்டார். சம்விருத்தா மாட்டிக் கொண்டுள்ளார். இவராவதுஇருப்பாரா அல்லது ஓடிப் போவாரான்னு தெரியலை!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil