ஹீரோயின்
சிம்ரனுக்கும் அவரது தங்கை(?) மோணலுக்கும் லடாயாம். தற்போது இருவரும் ஒரே வீட்டில் வசிக்கவில்லை என்றுகோடம்பாக்கத்தில் பேச்சு அடிபடுகிறது.
அக்காவின் பலத்த சிபாரிசால் முன்னணி ஹீரோக்களின் படத்தில் அறிமுகமான மோணல். தற்போது படங்களே இல்லாமல்நொந்த நிலையில் இருக்கிறார். அக்காவின் அட்வைஸ் சரியாக பலனளிக்கவில்லை என்ற கவலை ஒரு பக்கம் இருந்தாலும் தனதுகாதலில்தான் அக்கா அதிக அக்கறை காட்டுகிறார். எனது முன்னேற்றம் குறித்து கவலைப்படுவதேயில்லை என்ற வருத்தமும்அவரைக் கோபப்படுத்தியுள்ளதாம்.
ராஜு சுந்தரமும், சிம்ரனும் காதலிக்கிறார்கள் என்பது ஷாஜஹான் காலத்து செய்தி. அது மோணலுக்குப் பிடிக்கவில்லையாம்.படங்கள் இல்லை என்ற வருத்தம், அக்கா சரியாக ஹெல்ப் செய்வதில்லை என்ற மன எரிச்சல், இத்தோடு, ராஜு சுந்தரத்துடன்அக்கா நெருக்கமாக பழகுவது என ஒட்டுமொத்தமாக சிம்ரனை நினைத்தால் மோணலுக்கு பத்திக்கிட்டு எரிகிறதாம்.
இதனால் தற்காலிகமாக தனது ஜாகையை வேறுஇடத்திற்கு மாற்றிக் கொண்டிருக்கிறாராம். இப்போது தங்கையை தாஜா செய்யும்முயற்சியில் தீவிரமாகியுள்ளாராம் சிம்ரன். (மோணலின் உடற்கட்டுக்கும், முகவெட்டுக்கும் இந்த அளவு படங்கள் கிடைத்ததேஅதிகம் என்கிறார் ஒரு கோடம்பாக்கவாசி)


Click it and Unblock the Notifications











