»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Subscribe to Oneindia Tamil

தமிழ் பட உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நடிகை சிம்ரன் மும்பை பறந்துவிட்டார். இனி அவர் தமிழ் படங்களில் நடிக்க மாட்டார்என்று தெரிகிறது.

பூச்சூடவா படம் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானார் சிம்ரன். தொடர்ந்து, வி.ஐ.பி, நேருக்கு நேர், துள்ளாத மனமும் துள்ளும் ஆகியபடங்களில் நடித்தார்.

வாலி படத்தின் மூலம் முன்னணி கதாநாயகி அந்தஸ்தைப் பெற்றார். தொடர்ந்து கண்ணெதிரே தோன்றினாள், பம்மல் கே சம்பந்தத்தில்நடித்தார். பம்மலில் கமலுக்கு இணையான நடிப்பினால் பாராட்டப்பட்டார்.

பட வாய்ப்புக்கள் நன்றாக இருந்த நிலையில் பிரப தேவாவின் அண்ணன் டான்ஸ் மாஸ்டர் ராஜூ சுந்தரத்திற்கும் சிம்ரனுக்கும் இடையேகாதல் மலர்ந்தது.

இவர்களின காதலை அடிப்படையாகக் கொண்டு, சிம்ரன்-ராஜூசுந்தரம் நடிக்க ஐ லவ் யூடா என்று ஒரு படமும் எடுக்கத்தொடங்கினர். படம் எடுத்து முடிப்பற்குள், அவர்களின் காதல் முறிந்துவிட்டது.

நானும் சிம்ரனும் இணைவதற்கு வாய்ப்பே இல்லை என்று ராஜூ சுந்தரம் அறிவிக்க இருவருக்கும் இடையே இருந்த காதல் முற்றிலுமாகமுறிந்தது.

பம்மல் கே சம்பந்தம் படத்தில் கமல்ஹாசனுடன் நடித்தபோது கமல்ஹாசனுக்கும் சிம்ரனுக்கும் இடையே உறவு ஏற்பட்டதால் தான்ராஜூவைப் பிரிந்தார் சிம்ரன் என்று கூறப்பட்டது. பம்மலைத் தொடர்ந்து தனது பஞ்ச தந்திரம் படத்திலும் சிம்ரனை நாயகியாக்கிஇருவருக்கும் இடையிலான உறவை கமல் மேலும் வெளிப்படுத்தினார்.

கமலும் சிம்ரனும் படப்பிடிப்புக்கு முன்னரே கனடாவில் சுற்றித் திரிந்தனர். கனடாவில் ஒரு வெளிநாட்டுக்காரருடனும் சிம்ரன் நெருங்கிவருவதாக தகவல் வந்தது. அவர் மீதான கிசுகிசுக்கள் வலுத்து வந்த நிலையில் கனடாவில் பஞ்சதந்திரம் பாடல் காட்சி படமாகிக்கொண்டிருந்தபோது அவரது தங்கை மோணல் தற்கொலை நடந்தது.

அவரது இறுதிச் சடங்கில் சிம்ரன் கலந்து கொள்ளவில்லை. இதனால் அவர் மீது சினிமா உலகில் எரிச்சலான பார்வை பார்க்கப்பட்டது.சாவகாசமாக சென்னை வந்த சிம்ரன், பத்திரிக்கையாளர்களை சந்த்து மோனலின் தற்கொலை முடிவுக்கு டான்ஸ் மாஸ்டர் கலாவின் தம்பிபிரசன்னா தான் என்றார். தொடர்ந்து மும்தாஜ், அவரது மேனேஜர் மீதும் பழி சுமத்தினார். இதையடுத்து மும்தாஜை போலீசார் விசாரித்துவருகின்றனர்.

ஆனால், சிம்ரனை இன்னும் போலீசாரால் விசாரிக்க முடியவில்லை, அவர் தொடர்ந்து போலீசை சந்திப்பதை தவிர்த்து வருவதாகத்தெரிகிறது. இந் நிலையில் சிம்ரன் மீது வழக்குப் போடப் போவதாக மும்தாஜ் அறிவித்தார்.

கமலின் மனைவி சரிகா அவரிடம் இருந்து விவாகரத்து வாங்கப் போவதாகவும் இதற்குக் காரணம் சிம்ரன் தான் என்பதால் கோடம்பாக்கத்தில் சிம்ரன் ஒரு வில்லியைப் போல பார்க்கப்பட்டார்.

இவ்வாறு பலவித பிரச்சினைகளைச் சந்தித்து வரும் சிம்ரன் சில தினங்களுக்கு முன் தனது சென்னை வீட்டைக் காலி செய்துள்ளார். தான்வசித்து வந்த சென்னை தியாகராய நகர், வெங்கட்ராமன் தெருவில் உள்ள வீட்டை காலி செய்து அவருடைய பொருட்களை லாரி மூலம்மும்பைக்கு அனுப்பியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து தனது கணக்குகளை பைசல் செய்யுமாறு தயாரிப்பாளர்களிடம் சிம்ரன் கேட்டுள்ளார். அனைவரும் அவரது பாக்கியைத்தந்துவிட்டதாகத் தெரிகிறது. இந் நிலையில் சிம்ரனின் மேனேஜர் மணி, அவரிடம் சென்று தனக்கு தர வேண்டிய பாக்கியை செட்டில் செய்யசொல்லி இருக்கிறார்.

ஆனால், இனி நான் தமிழ் படங்களில் இனிமேல் நடிக்க போவதில்லை; சென்னைக்கும் இனிமேல் வரமாட்டேன், உனக்கு நான் ஏதும் தரவேண்டியது இல்லை. உன்னால் முடிந்ததை செய்து கொள் என்று கூறிவிட்டுச் சென்றுவிட்டதாகத் தெரிகிறது.

இந்த மணி மூலமாகத் தான் சிம்ரன் தனது வீட்டைக் காலி செய்த விவரம் வெளியில் தெரியவந்தது. மும்பைக்கு பறந்திருக்கிறார்.

மும்பையில் தனது பெற்றோருடன் தங்கியுள்ள சிம்ரனுக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து வருவதாகக் கூறப்படுகிறது. அவசரகதியில்மாப்பிள்ளை பார்க்கும் வேலை நடக்கிறது. பஞ்சாபியான சிம்ரனுக்கு அதே இனத்தைச் சேர்ந்த மாப்பிள்ளையைத் தேடி வருகின்றனர்.

இந் நிலையில் ஒரு வார இதழுக்குக் கமல் தந்துள்ள பேட்டியில் அவருக்கும் சிம்ரனுக்கும் இடையே பிரச்சனைஏற்பட்டுள்ளதைப் போன்ற தொனி உள்ளது. இதுவும் சிம்ரன் சென்னையைவிட்டு வெளியேற ஒரு காரணமாகஇருக்கலாம் என்று தெரிகிறது.

Please Wait while comments are loading...