»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Subscribe to Oneindia Tamil

வாலி படத்தில் தனக்கு அருமையான கேரக்டரைக் கொடுத்து வாழ்வு கொடுத்த டைரக்டர் எஸ்.ஜே. சூர்யாவுக்கு சிம்ரன் மிக தாராளமாகநன்றிக் கடன் செலுத்தி வருகிறார்.

அவருடன் நடிக்கும் நியூ படத்தில் படு தாராளமாக நடிதது வருகிறார் சிம்ரன். மவுத்-டு-மவுத் கிஸ் கொடுத்து சூர்யாவையே வெட்கப்படவைத்துவிட்டார் சிம்ரன்.

அஜீத், ஜோதிகா நடிக்க சூர்யா டைரக்ட் செய்யும் படம் என்று நியூ படம் குறித்து சில ஆண்டுகளுக்கு முன்பு செய்தி வெளியானது. ஆனால்சீக்கிரத்திலேயே அது கிடப்பில் போடப்பட்டது.

சில கால இடைவெளிக்குப் பிறகு இப்போது நியூ தூசு தட்டப்பட்டு மீண்டும் வேலைகள் தொடங்கியுள்ளன. ஆனால் அஜீத்தும்,ஜோதிகாவும்தூக்கப்பட்டு விட்டனர். அதற்குப் பதிலாக சூர்யாவே ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக சிம்ரன் நடிக்கிறார்.

அஜீத்தைத் தூக்கி விட்டு ஜோதிகாவுடன் ஜோடி சேர்ந்துதான் சூர்யா நடிப்பதாக இருந்தார். ஆனால் ஜோதிகாவுக்கு மார்க்கெட் இல்லை என்பதை யோசித்துப் பார்த்த சூர்யா, உடனடியாக அவரைத் தூக்கி விட்டு சிம்ரனைப் போட்டுவிட்டார்.

வாலி படம் மூலம்தான் தனக்கு சினிமாவில் பெரிய பிரேக் கிடைத்தது என்ற நன்றியுணர்வுடன் இருக்கும் சிம்ரன், நியூ படத்தில் சூர்யாவுக்குநல்ல ஒத்துழைப்பு கொடுத்து வருகிறாராம்.

கொஞ்சம் தாராளமாக நடிக்க வேண்டியதிருக்கும் என்று சூர்யா கேட்டபோதுகூடு, கொஞ்சம் என்ன, கூடுதலாகவே தாராளமாகநடித்துவிட்டால் போச்சு என்று கூறி எவ்வளவு தேவையோ அவ்வளவையும் எடுத்துக்கோங்கோ என்றாராம் சிம்ரன்.

இதையடுத்து இருவரும் சேர்ந்து ஏ சர்டிபிகேட் படம் எடுத்து வருகின்றனர். ரஹ்மான் தான் இசை. வைரமுத்துவின் பாடல்கள்.அமெரிக்காவில் பாடல் காட்சிகள் எடுக்கப் போகிறார்கள்.

பி.கு: நியூ படத்தின் ஒரிஜினல் கதை பீக் என்ற ஆங்கிலப் படத்தின் தழுவலாம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil