»   »  முதல்முறையாக போலீசாகிறார் ‘கோவில்பட்டி வீரலட்சுமி’!

முதல்முறையாக போலீசாகிறார் ‘கோவில்பட்டி வீரலட்சுமி’!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : கன்னப் படமொன்றில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் நடிகை சிம்ரன்.

1990ல் தமிழில் முன்னணி நாயகர்களின் ஜோடியாக நடித்து, ரசிகர்களின் கனவுக் கன்னியாக வலம் வந்தவர் நடிகை சிம்ரன். முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்த போதே இவர், தீபக் என்பவரை மணந்து குடும்பத்தலைவி ஆனார்.

திருமணத்திற்குப் பிறகு சிலகாலம் சினிமாவில் இருந்து விலகி இருந்த சிம்ரன், பின் மீண்டும் நடிக்கத் தொடங்கினார். படங்கள் மட்டுமின்றி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கேற்றார்.

திரிஷா இல்லனா நயன்தாரா...

திரிஷா இல்லனா நயன்தாரா...

தற்போது தமிழில் ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடிக்கும் திரிஷா இல்லனா நயன்தாரா படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இது தவிர சொந்த தயாரிப்பு நிறுவனம் தொடங்கி படங்களைத் தயாரிக்கவும் சிம்ரன் முடிவு செய்துள்ளார்.

அலோன்...

அலோன்...

இந்நிலையில், கன்னடப் படமொன்றில் நடிக்கவும் சிம்ரன் ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்திற்கு அலோன் எனப் பெயரிடப்பட்டுள்ளது. ஆக்‌ஷன் திரில்லராக உருவாகும் இப்படத்தில் சிம்ரன் போலீஸ் வேடத்தில் நடிக்கிறாராம்.

முதன்முறையாக...

முதன்முறையாக...

முன்னதாக வித்தியாசமான கதாபாத்திரங்களில் சிம்ரன் நடித்திருந்தாலும், அவர் முதன்முதலாக போலீஸ் வேடம் ஏற்று நடிக்கவிருக்கும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

மெய்சிலிர்த்துப் போனேன்...

மெய்சிலிர்த்துப் போனேன்...

இது தொடர்பாக சிம்ரன் கூறுகையில், ‘இந்த படத்தின் கதையையும், எனது கதாபாத்திரத்தையும் கேட்டு நான் மெய்சிலிர்த்து போனேன். பொதுவாக நான் ஆக்‌ஷன் படங்களுக்கு மிகப்பெரிய ரசிகை. ஆகையால், இப்படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன்' எனத் தெரிவித்துள்ளார்.

English summary
Simran is not just making a comeback in Kollywood, but in the neighbouring Sandalwood too. The actress will be seen playing a police officer in a Kannada film, titled 'Alone'.
Please Wait while comments are loading...