கருப்பும் காவியுமாக சிம்ரனும் குஷ்புவும்.. அடடே இவங்க ரீ யூனியன் போட்டோஸ் நல்லா இருக்கே!

சென்னை: தமிழ் சினிமாவின் 90ஸ் ரசிகர்களுக்கு மறக்க முடியாத இரண்டு நடிகைகள் என்றால் அதில் நிச்சயமாக சிம்ரனும், குஷ்புவும் இருப்பார்கள். ஒரு காலத்தில் முன்னணி ஹீரோக்களின் முதல் சாய்ஸாக வலம் வந்த இருவரும், இப்போது பல ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்துக் கொண்ட புகைப்படங்களை நடிகை சிம்ரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்த சந்திப்பில் சிம்ரன் முழுக்க கருப்பு நிற கேஷுவல் உடையிலும், குஷ்பு முழுவதும் காவி நிற உடையிலும் இருப்பது ரசிகர்களிடையே பேசுபொருளாகியுள்ளது. "Black & Saffron Reunion" என ரசிகர்களே இந்த புகைப்படங்களுக்கு பெயர் வைத்திருக்கும் அளவுக்கு சமூக வலைதளங்களில் இந்த சந்திப்பு வைரலாகி வருகிறது.

சமீபத்தில்தான் குஷ்புவின் மகள் அவந்திகாவின் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. அந்த திருமணத்தில் தமிழ் சினிமா மற்றும் அரசியல் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். ஆனால் சிம்ரன் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. இதனால், திருமணத்தில் நேரில் வாழ்த்த முடியாததால், அதன்பிறகு தனியாக குஷ்புவை சந்தித்து அன்பு பாராட்டி இருக்கலாம் என்ற யூகமும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதுகுறித்து சிம்ரன் தனது பதிவில், Long time. Same warmth. ❤️ என்று பதிவிட, அதற்கு நடிகை குஷ்புவோ, " Same gorgeousness ❤️❤️❤️❤️" என்று கமெண்ட் போட்டுள்ளார்.

Simran and Kushboo Reunite After Years Their Heartwarming Photos Delight 90s Tamil Cinema Fans

சிம்ரன் - குஷ்பு: தமிழ் சினிமாவில் குஷ்பு ஒரு தலைமுறையை ஆட்சி செய்த நடிகை என்றால், 90களின் இறுதியிலும், 2000-களின் தொடக்கத்திலும் அந்த இடத்தை மிக வேகமாக பிடித்தவர் சிம்ரன். விஜய், அஜித், சரத்குமார், பிரபுதேவா, சூர்யா, கமல்ஹாசன் என முன்னணி நடிகர்களுடன் இருவரும் தனித்தனியாக ஏராளமான வெற்றிப்படங்களை கொடுத்துள்ளனர். ரசிகர்களின் கனவுக்கன்னிகளாக வலம் வந்த இந்த இருவரும் இன்று கூட அதே அழகுடனும், அதே புன்னகையுடனும் காட்சியளிப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அப்படியா?: சினிமா ரசிகர்களுக்கு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், இந்த சந்திப்பை பார்த்த ரசிகர்கள், "இருவரும் இணைந்து ஒரு பெண் மையப்படுத்தப்பட்ட கதையில் நடித்தால் நிச்சயம் வேற லெவல் இருக்கும்" என்ற விருப்பத்தையும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

Simran and Kushboo Reunite After Years Their Heartwarming Photos Delight 90s Tamil Cinema Fans

எதிர்பார்ப்பு: கடந்த சில ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் பெண்களை மையப்படுத்திய கதைகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அனுபவமும், திரை ஆளுமையும் கொண்ட சிம்ரன் - குஷ்பு கூட்டணி அப்படிப்பட்ட ஒரு கதையில் இணைந்தால், அது ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. அதற்கான எந்த அதிகாரப்பூர்வ தகவலும் தற்போது இல்லை என்றாலும், இந்த ஒரு சந்திப்பே அந்த எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் உருவாக்கியிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X