துபாயில் ஏப். 5,6,7ம் தேதிகளில் ஜாக்பாட் நடத்தும் சிம்ரன்
துபாய்: ஜெயா டிவியின் ஜாக்பாட் நிகழ்ச்சி்க்காக துபாய் வந்துள்ள நடிகை சிம்ரன் நேற்று தனது பிறந்தநாளை தனது குடும்பத்தார் மற்றும் ரசிகர்களுடன் கொண்டாடினார்.
ஜெயா டிவியின் ஜாக்பாட் நிகழ்ச்சியின் 500வது எபிசோட் துபாய் கராமாவில் உள்ள இந்திய உயர் நிலைப் பள்ளி அரங்கில் இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் நடக்கிறது. இதற்காக நடிகை சிம்ரன் தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் துபாய் வந்துள்ளார். நேற்று சிம்ரனின் பிறந்தநாள் என்பதால் இந்திய உயர் நிலைப்பளிளியின் ஷேக் ராஷித் அரங்கில் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அங்கு சிம்ரன் தனது கணவர், குழந்தைகளுடன் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடினார்.
பல்வேறு தமிழ் அமைப்புகளின் பிரமுகர்கள் தங்களது வாழ்த்துக்களை நடிகை சிம்ரனுக்கு தெரிவித்துக் கொண்டனர். துபாயில் நடக்கும் ஜாக்பாட் நிகழ்ச்சிக்கு அனைவரும் வரவேற்கப்படுகிறார்கள்.
Comments


Click it and Unblock the Notifications
