கிளாமர்னா என்ன?.. வல்கர்னா என்ன?.. அழகா விளக்கம் சொன்ன சிம்ரன்.. த்ரோபேக் பேட்டில எவ்ளோ க்யூட்!
சென்னை: மும்பையில் பிறந்து வளர்ந்த பஞ்சாப் குடும்பத்தை சேர்ந்த ரிஷிபாலா தமிழ் சினிமாவில் சிம்ரன் எனும் பெயரில் அறிமுகமானார். விஐபி, ஒன்ஸ்மோர் என நடிக்க ஆரம்பித்த சிம்ரன் ஏகப்பட்ட ஹிட் படங்களில் நடித்துள்ளார். சிம்ரன் ஹீரோயினாக நடித்தாலே அந்த படம் மினிமம் கியாரண்டி படமாக மாறியது.
விஜய், அஜித், கமல்ஹாசன், பிரசாந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு அவர்களுக்கு இணையாக நடிப்பில் அசத்திய நடிப்பு ராட்சசியாகவே சிம்ரன் அசத்தி வந்தார்.

சினிமாவில் கிளாமர் தவிர்க்க முடியாத ஒன்று என்றும் கிளாமர் மற்றும் வல்கர் இரண்டுக்கும் இடையே உள்ள வித்தியாசம் என்னவென்று சிம்ரன் பேசிய த்ரோபேக் பேட்டியை தற்போது அதிகம் ஷேர் செய்து சிம்ரனுக்கு ரசிகர்கள் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
ஹோம்லி லுக்கில் அம்சமாக: இளம் ஹீரோயின்கள் என்றாலே கிளாமர் உடைகளை அணிந்துக் கொண்டு நடித்தால் தான் ரசிகர்கள் விரும்புவார்கள் என்றெல்லாம் இல்லாமல் சாதாரண சுடிதார் மற்றும் சேலை அணிந்துக் கொண்டு தனது நடிப்பால் ரசிகர்களை கவர முடியும் என நிரூபித்துக் காட்டியவர் நடிகை சிம்ரன். ஜோடி, கண்ணெதிரே தோன்றினாள், துள்ளாத மனமும் துள்ளும், வாலி, பிரியமானவளே, பம்மல் கே. சம்மந்தம், பஞ்ச தந்திரம், கன்னத்தில் முத்தமிட்டால் என பல படங்களில் சிம்ரன் ஹோம்லி லுக்கில் நடித்து ஸ்கோர் செய்திருப்பார்.
கிளாமர் தவிர்க்க முடியாது: சினிமாவில் கிளாமர் என்பதை தவிர்க்கவே முடியாது. ஜோடி படத்தில் ஃபர்ஸ்ட் ஹாஃப் கிளாமர் உடையில் நடித்திருப்பேன். அதன் பின்னர், செகண்ட் ஹாஃப் பர்ஃபார்ம் பண்ண வேண்டிய இடங்களில் சுடிதார் அணிந்து தான் நடித்திருப்பேன். டைம் படத்தில் ஒரு பாடலுக்கு கவர்ச்சியாக நடனமாடியிருப்பேன். வாலி, துள்ளாத மனமும் துள்ளும் படங்களை எல்லாம் இப்போதும் பார்க்கலாம். கிளாமராக நடிகைகள் நடிப்பதில் தவறில்லை. வல்கராக சென்றால் குடும்பத்துடன் அந்த படத்தை பார்க்கவே முடியாது எனக் கூறியுள்ளார்.

இரண்டுக்கும் உள்ள வித்தியாசம்: கிளாமர் என்றால் க்யூட்னஸ். அது நிச்சயம் ஒரு படத்துக்கும் படம் பார்க்க வருகிற யங் ஆடியன்ஸுக்கும் தேவையான ஒன்று. ஆனால், வல்கர் என்பது சீப்னஸ். அதை நடிகைகள் நிச்சயம் தவிர்த்து விட்டு நடிப்பில் அதிக கவனம் செலுத்தலாம். நடிகைகளின் டைம் பீரியட் என்பதே ஒரு 7 முதல் 8 ஆண்டுகள் தான் அதிகபட்சம். அதற்குள் எத்தனை நல்ல படங்களை கொடுக்க முடியுமோ கொடுத்து விட்டு ரசிகர்களின் மனங்களில் இடம் பிடித்துக் கொள்ளலாம் என அந்த த்ரோபேக் பேட்டியில் செம க்யூட்டாக பேசியுள்ளார் சிம்ரன்.
சிம்ரன் குடும்ப வாழ்க்கை: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த சிம்ரன் 2003ம் ஆண்டு தீபக் பாகா என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். அதன் பின்னர் அவருக்கு சினிமா வாய்ப்புகள் குறைந்து விட்டன. நடிகை சிம்ரனுக்கு 2 மகன்கள் உள்ளனர். திருமணத்துக்குப் பின்னர் வாரணம் ஆயிரம் படத்தில் அப்பா சூர்யாவுக்கு ஜோடியாக நடித்த சிம்ரன் ஐந்தாம் படை படத்தில் வில்லியாக நடித்தார். சீமராஜா, பேட்ட, கேப்டன் என கம்பேக் கொடுத்துள்ள சிம்ரன் விரைவில் வெளியாக உள்ள அரண்மனை 4 படத்தில் குஷ்புவுடன் இணைந்து கிளைமேக்ஸ் பாட்டுக்கு நடனமாடியுள்ளார். சியான் விக்ரமின் துருவ நட்சத்திரம் படத்திலும் முக்கியமான ரோலில் நடித்துள்ளார். மேலும், பிரசாந்தின் அந்தகன் படத்திலும் இவர் தான் வில்லி.


Click it and Unblock the Notifications











