கமலுடன் நடிக்கவில்லை - சிம்ரன் மறுப்பு
சென்னை: கமல்ஹாஸனுக்கு ஜோடியாக நான் நடிக்கவில்லை. நான் எந்தெந்த படத்தில் நடிக்கிறேன் என்ற விவரங்களை விரைவில் மீடியாவுக்கு சொல்கிறேன், என்று சிம்ரன் தெரிவித்துள்ளார்.

த்ரிஷ்யம்
மலையாளத்தில் மோகன்லால் - மீனா நடிப்பில் பெரும் வெற்றி பெற்ற த்ரிஷ்யம் படம் தமிழில் ரீமேக் ஆகிறது. இந்தப் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் கமல்.

சிம்ரன் ஜோடி
அவருக்கு ஜோடியாக நதியா நடிப்பார் என்று கூறப்பட்டது. பின்னர் சிம்ரனிடம் பேசி இருப்பதாகவும், இதற்கு கமலும் சம்மதித்ததாகவும் செய்திகள் வெளியாகின.

சிம்ரன் மறுப்பு
ஆனால் நடிகை சிம்ரன் இந்த செய்திகளை மறுத்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில், "த்ரிஷ்யம் ரீமேக்கில் நான் நடிப்பதாக வந்த செய்திகளில் உண்மையில்லை. இன்னும் சொல்லப் போனால், அந்தப் படத்தின் எந்த மொழி ரீமேக்கிலும் நான் இல்லை. எனது அடுத்தடுத்த படங்கள் என்னவென்பது குறித்து விரிவாக மீடியாவுக்குத் தெரிவிப்பேன்," என்று கூறியுள்ளார்.

கவுதமி
இதற்கிடையில், த்ரிஷ்யம் ரீமேக்கில் கமலுக்கு ஜோடியாக கவுதமியையே நடிக்க வைக்கவும் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











