குட் பேட் அக்லி.. அஜித்துடன் அந்த நடிகையும் நடிக்கிறாங்களா?.. அட செம ஜோடியாச்சே ப்பா

சென்னை: அஜித் நடித்த விடாமுயற்சி திரைப்படம் ஓரளவுக்குத்தான் நல்ல வரவேற்பை பெற்றது. அந்தப் படத்தைத் தொடர்ந்து ஏப்ரல் பத்தாம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாகவிருக்கிறது. விடாமுயற்சி படத்தில் விட்டதை குட் பேட் அக்லியில் பிடித்துவிடலாம் என்கிற நம்பிக்கை ஏகே ரசிகர்களிடம் அதிகமாகவே இருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில் படம் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியிருக்கிறது.

அஜித் நடிப்பில் கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் கழித்து விடாமுயற்சி திரைப்படம் கடந்த ஆறாம் தேதி வெளியானது. மகிழ் திருமேனி இயக்கத்தி உருவாகியிருந்த அப்படத்தில் ஏகேவுடன் திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா உள்ளிட்டோர் நடித்திருந்தார்கள். மிகப்பெரிய எதிர்பார்ப்போடு வெளியான அந்தப் படம் ரசிகர்களுக்கு முழு திருப்தியை கொடுக்கவில்லை. ஆக்‌ஷன் ஹீரோ என்கிற இமேஜையே மகிழ் உடைத்துவிட்டாரே என்று ரசிகர்கள் ரொம்பவே நொந்துகொண்டார்கள் என்பதுதான் எதார்த்த உண்மை.

Ajith Simran Good Bad Ugly

குட் பேட் அக்லி: இதற்கிடையே விடாமுயற்சி படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடிக்க கமிட்டானார் அஜித்குமார். ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் பல வருடங்களுக்கு பிறகு தற்போதுதான் அஜித் செய்தார் என்பது கவனிக்கத்தக்கது. அதற்கு காரணம் கார் ரேஸ். தன்னை நம்பி பணம் போட்ட தயாரிப்பாளர்களுக்கு பாதிப்பு வந்துவிடக்கூடாது என்பதற்காக இரண்டு படங்களின் கமிட்மென்ட்டுகளையும் முடித்துவிட்டுத்தான் துபாயில் நடந்த கார் ரேஸில் கலந்துகொண்டார் அவர்.

பெரிய எதிர்பார்ப்பு: விடாமுயற்சி திரைப்படம் சுமாரன வரவேற்பை பெற்றதன் காரணமாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் குட் பேட் அக்லி மீது ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பை வைத்திருக்கிறார்கள். ஏற்கனவே விஷாலை வைத்து மார்க் ஆண்டனி படத்தை இயக்கி மெகா ஹிட்டை கொடுத்தவர் ஆதிக். முக்கியமாக அவர் அஜித்தின் வெறித்தனமான ரசிகர் என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே தங்களுக்கு தேவையான அத்தனையும் இந்தப் படத்தில் இடம்பெற்றிருக்கும் என்று காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.

ஏப்ரல் 10ல் ரிலீஸ்: முதலில் இந்தப் படம் பொங்கலுக்கு ரிலீஸாவதாக இருந்தது. ஆனால் விடாமுயற்சி படத்தின் ரிலீஸில் ஏற்பட்ட சில மாற்றங்கள் காரணமாக இந்தப் படம் ஏப்ரல் 10ஆம் தேதிக்கு தள்ளிப்போனது. அதேபோல் தேவிஸ்ரீ பிரசாத்தான் முதலில் இப்படத்துக்கு இசையமைக்க ஒப்பந்தமானார். ஆனால் சில காரணங்களால் அவருக்கு பதிலாக ஜிவி பிரகாஷ் வந்திருக்கிறார். சமீபத்தில்கூட அவர் தனது எக்ஸ் பக்கத்தில், 'குட் பேட் அக்லி படத்துக்காக தீயாக வேலை செய்துகொண்டிருக்கிறேன்' என்று கூறி ரசிகர்களின் பல்ஸை எகிற வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

படத்தில் அந்த ஹீரோயின்?: இந்நிலையில் குட் பேட் அக்லி படம் குறித்து புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. அதாவது இப்படத்தில் சிம்ரன் கேமியோ ரோல் செய்திருப்பதாகவும்; அதனை படக்குழு சஸ்பென்ஸாக வைத்திருக்கிறது என்றும் கூறப்படுகிறது. இது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஏற்கனவே அஜித்தும் சிம்ரனும் வாலி, அவள் வருவாளா உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்கள் என்பது நினைவுகூரத்தக்கது. இப்படத்தில் திரிஷா ஹீரோயினாகவும்; எஸ்ஜே.சூர்யா முக்கியமான கதாபாத்திரத்திலும் நடிக்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X