தலைவி போஸ்டரையே 3 மணி நேரம் பார்ப்போம்.. மீனா, ஜோதிகா, ரம்பாவை எல்லாம் ஒரு காலத்துல ஓடவிட்ட சிம்ரன்!

சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக 90களில் அறிமுகமாகி தூள் கிளப்பிய நடிகை சிம்ரன் இன்று தனது 48வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். மாயாவி படத்தில் ஜோதிகாவுக்கு முன்னாடியே சிம்ரனை பற்றி பேசும் காட்சிகள் மிகைப்படுத்தலான ஒன்றாக இல்லாமல் உண்மையாக இருந்ததால் தான் இன்னமும் ரசிகர்கள் மத்தியில் அந்த சீன் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

பிரசாந்த், விஜய், அஜித், கமல்ஹாசன் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு மற்ற முன்னணி நடிகைகள் சிம்ரனை வீழ்த்த முடியாமல் தவித்த காலங்கள் எல்லாம் சிம்ரன் யுகம் என்றே சொல்லும் அளவுக்கு கோலிவுட்டில் கோலோச்சி வந்தார்.

Simran is the perfect example and dictionary for heroine

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் சிம்ரன் நடிக்கவே இல்லை என்கிற விஷயத்தையும் பேட்ட படத்தில் சிம்ரனின் தீவிர ரசிகர் கார்த்திக் சுப்புராஜ் நிறைவேற்றி வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஒரு தசாப்தத்தின் தலைவி: 1997ம் ஆண்டு விஐபி படத்தின் மூலம் அறிமுகமான சிம்ரன் அதே வருஷத்தில் விஜய்யின் ஒன்ஸ்மோர், விஜய், சூர்யா நடித்த நேருக்கு நேர், பூச்சூடவா என அடுத்தடுத்து பல படங்களில் நடித்து ரசிகர்களின் இமிடியேட் கிரஷ்ஷாக மாறினார். 1998ல் அஜித்துடன் அவள் வருவாளா, சரத்குமாருடன் நட்புக்காக, விஜயகாந்த் உடன் கண்ணு படப் போகுதய்யா என தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியானார். ஒரு வருஷத்தில் 10 பெரிய படங்கள் வந்தால், அந்த பத்து பெரிய படங்களிலும் ஹீரோயின் நம்ம சிம்ரன் தான் என்கிற அளவுக்கு மற்ற நடிகைகளை பின்னுக்குத் தள்ளிவிட்டு நம்பர் ஒன் நடிகையாக மாறிய சிம்ரன் தனது முதலிடத்தை பல வருடங்கள் தக்க வைத்து மாஸ் காட்டினார்.

Simran is the perfect example and dictionary for heroine

மீனா, ஜோதிகா, ரம்பாவுக்கு அடி: சிம்ரன் வருவதற்கு முன்பாக முன்னணி ஹீரோயினாக இருந்த மீனாவை திடீரென தமிழ் சினிமா கண்டுக் கொள்ளாமல் போக காரணமாகவே சிம்ரன் மாறினார். ஜோடி படத்தில் சிம்ரனின் தோழியாக சின்ன ரோலில் நடித்த திரிஷா ஹீரோயின் ஆனது போலத்தான். வாலி படத்தில் ஜோதிகாவும் தமிழ் சினிமாவில் ஹீரோயின் ஆனாலும், சிம்ரன் இடத்தை அவரால் கடைசி வரை பிடிக்கவே முடியவில்லை. ஒரு சில படங்களில் ரம்பா ரசிகர்களை கவர்ந்தாலும், சிம்ரன் அளவுக்கு அவரால் முன்னணி நடிகையாக தமிழ் சினிமாவில் வரவே முடியவில்லை.

விஜய்க்கு சரியான ஜோடி: பிரசாந்த் உடன் ஜோடி, கண்ணெதிரே தோன்றினாள் படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த சிம்ரன் தளபதி விஜய்க்கு சரியான ஜோடி என அவரே சொல்லும் அளவுக்கு துள்ளாத மனமும் துள்ளும், பிரியாமனவே உள்ளிட்ட படங்களில் நடிப்பில் பிரித்து மேய்ந்திருப்பார்.

Simran is the perfect example and dictionary for heroine

நின்னு பேசிய வாலி: எஸ்.ஜே. சூர்யா இயக்கத்தில் அஜித்துக்கு ஜோடியாக வாலி படத்தில் சிம்ரன் நடித்த காட்சிகளை சமீபத்தில், அந்த படம் ரீ ரிலீஸ் ஆன போதும் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். சமீப காலமாக இப்படியொரு பர்ஃபார்ம் பண்ணுகிற ஹீரோயினை எங்கேயுமே பார்க்க முடியவில்லையே என ரசிகர்கள் இன்னமும் ஃபீல் பண்ணிக் கொண்டுதான் இருக்கின்றனர்.

Simran is the perfect example and dictionary for heroine

ஹீரோயினுக்கான இலக்கணம்: ஹீரோயின் என்றால் பொம்மை போல அழகாக மட்டும் இருக்கக் கூடாது என்றும் ஹீரோவுக்கு நிகராக முகத்தில் காமெடி, வில்லத்தனம், ரொமான்ஸ் என அனைத்திலும் சிக்ஸர் அடிக்கும் சிம்ரன் போல இருக்க வேண்டும். ஆனால், அப்படி ஹீரோயின்கள் கிடைப்பது அரிதிலும் அரிதுதான் அதனால் தான் தலைவி சிம்ரன் போஸ்டரை கூட 3 மணி நேரம் பார்ப்போம் என்றும் அவர் இடுப்பாட்டிக் கொண்டு வந்தால், விஜய்யே நடனமாட தடுமாறுவார் என்றும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X