நாச்சியாக சிம்ரன்... வித்தியாசமான, அழுத்தமான கெட்டப்பில் சிம்ரனின் லுக் வெளியீடு!

சென்னை : நடிகர் விக்ரம், துருவ் விக்ரம் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் மகான்.

இந்தப் படம் வரும் 10ம் தேதி அமேசான் பிரைமில் நேரடியாக ஒளிபரப்பாக உள்ளது.

இந்நிலையில் படத்தின் கேரக்டர்களை ஒவ்வொன்றாக படக்குழு தற்போது வெளியிட்டு வருகிறது.

மகான் படம்

மகான் படம்

நடிகர் விக்ரம், துருவ் விக்ரம், சிம்ரன், பிரியா பவானி சங்கர், சிம்ஹா உள்ளிட்டவர்கள் லீட் கதாபாத்திரங்களில் நடித்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள படம் மகான். தனுஷை வைத்து ஜகமே தந்திரம் படத்தை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் அடுத்ததாக வெளியாகவுள்ளது மகான்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கம்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கம்

கார்த்திக் சுப்புராஜின் ஜகமே தந்திரம் படமும் நேரடியாக ஓடிடியில் வெளியான நிலையில் தற்போது இந்தப் படமும் வரும் பிப்ரவரி 10ம் தேதி அமேசான் பிரைமில் நேரடியாக வெளியாகவுள்ளது. இந்தப் படம் திரையரங்குகளில் ரிலீசாகும் என்ற எதிர்பார்ப்பில் இருந்த ரசிகர்கள் தற்போது ஏமாற்றமடைந்துள்ளனர்.

ரசிகர்கள் உற்சாகம்

ரசிகர்கள் உற்சாகம்

ஆயினும் நீண்ட நாட்களாக ரிலீசுக்காக இந்தப் படம் காத்திருந்த நிலையில், தற்போது ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது. படம் ரிலீசாக இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் படத்தின் பிரமோஷன் பணிகளை படக்குழு முடுக்கி விட்டுள்ளது.

சந்தோஷ் நாராயணன் இசை

சந்தோஷ் நாராயணன் இசை

சந்தோஷ் நாராயணன் இசையில் படத்தின் இரண்டு பாடல்கள் இதுவரை வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு படத்தில் சிம்ஹாவின் லுக்கையும் படக்குழு வெளியிட்டது. படத்தில் சத்தியவான் என்ற கேரக்டரில் அவர் நடித்துள்ளார்.

சிம்ரன் லுக் வெளியீடு

சிம்ரன் லுக் வெளியீடு

இந்நிலையில் இன்றைய தினம் படத்தின் மற்ற கேரக்டர்களையும் படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். படத்தில் நாச்சி என்ற கேரக்டரில் சிம்ரன் நடித்துள்ளார். மேலும் முத்துக்குமார், சனந்த் போன்றவர்களின் கேரக்டர்களையும் அவர் போஸ்டர்களாக வெளியிட்டுள்ளார்.

கேங்ஸ்டர் படம்

கேங்ஸ்டர் படம்

தனது வழக்கமான பாணியிலேயே கேங்ஸ்டர் படமாக இந்தப் படத்தையும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். ஆனால் முதல்முறையாக விக்ரம் -துருவ் விக்ரம் மற்றும் விக்ரம் -சிம்ரன் காம்பினேஷன்கள் படத்திற்கான எதிர்பார்ப்பை தூண்டியுள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X