ஹீரோயின்

By Staff

கல்யாணம் கட்டிக் கொண்டு காதலருடன் மும்பையில் செட்டிலாகி விட்ட சிம்ரன் மீண்டும் நடிக்க வருகிறார்- சிலநிபந்தனைகளுடன்.

சிம்ரன் நடிக்க வருவது உதயா படத்தில். விஜய்யுடன் ஜோடியாக. பல காலத்திற்கு முன்பு பூஜை போடப்பட்டுதொடங்கப்பட்ட இந்தப் படத்தின் முக்கியக் காட்சிகள் சில இன்னும் படமாக்கப்படாமல் கிடப்பில் உள்ளது.

தயாரிப்பாளர் பிரமிட் நடராஜன் இடையில் சுணங்கிப் போனதால் படப்பிடிப்பு அப்படியே தொங்கி விட்டது.அதற்குள் சிம்ரனும், விஜய்யும் வேறு வேறு படங்களில் பிசியாகி விட்டார்கள். இத்தனைக்கும் எப்போதும் லேட்செய்யும் ஏ.ஆர்.ரஹ்மான் பாடல்கள் அத்தனையையும் வேகமாக கொடுத்து விட்டார்.

இப்போது மீண்டும் படப்பிடிப்பைத் தொடங்கலாம் என்று நடராஜன் நினைத்தபோது தீபக்கைக் கல்யாணம் செய்துகொண்டு போய் விட்டார் சிம்ரன். இருந்தாலும், தனது படத்தை சிம்ரன் கண்டிப்பாக முடித்துக் கொடுக்க வேண்டும்என்று நடராஜன் சிம்ரனுக்கு செய்தி அனுப்பியுள்ளார்.

ஆனால் இதை முதலில் சிம்ரன் கண்டுகொள்ளவில்லை.இதனால் ஆத்திரமடைந்த நடராஜன், சிம்ரனை தேனிலவுகொண்டாட விடாமல் வழக்குப் போட்டு விடுவேன் என்று எச்சரிக்கவே, சிம்ரன் கொஞ்சம் கீழே இறங்கி வந்தார்.

டைரக்டர் அழகம் பெருமாளைத் தொடர்பு கொண்ட அவர் எல்லாவற்றையும் ரெடி செய்து விட்டுக் கூப்பிடுங்கள்.வந்து முடித்துக் கொடுக்கிறேன். ஆனால் தயாரிப்பாளருடன் நான் பேசத் தயாராக இல்லை என்று கூறிவிட்டார்.

இதனால் மிச்ச சொச்ச படத்தை முடிப்பதற்காக விஜய்யிடம் தேதி கேட்டு நடராஜன் நடையாய் நடந்துகொண்டுள்ளார். இருப்பினும் விரைவில் படப்பிடிப்பை தொடங்கி விடுவார்களாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X