திருமணம் செய்துகொண்டாலும் அது மட்டும் முடியவில்லை.. சிம்ரன் இப்படி சொல்லிட்டாங்களே.. என்ன ஆனது?
சென்னை: நடிகை சிம்ரன் கோலிவுட்டின் பெரிய ஹீரோயினாக வலம் வந்தவர். அனைத்து முன்னணி ஹீரோக்களுடனும் நடித்துவிட்ட அவர்; தனது பால்ய கால தோழரை காதலித்து கடந்த 2003ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். திருமணம் முடித்த கையோடு சில வருடங்கள் சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்த அவர்; வாரணம் ஆயிரம் படத்தில் நடித்து மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்தார்.
மும்பையை சேர்ந்த சிம்ரன் தமிழில் ஒன்ஸ்மோர் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். அதில் கமிட்டானபோதே நேருக்கு நேர், விஐபி ஆகிய படங்களிலும் கமிட்டானது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக அறிமுகமான ஒரே வருடத்தில் மூன்று படங்கள் வெளியாகின. மூன்று படங்களுமே அவருக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தன. கிளாமர், ஹோம்லி என எதுவாக இருந்தாலும் அசத்தக்கூடியவர் என்ற பெயரையும் அவர் குறுகிய காலத்திலேயே பெற்றுவிட்டார்.
முன்னணி ஹீரோக்களுடன்: தமிழில் விஜய், அஜித் என அப்போது வளர்ந்துவந்த ஹீரோக்களுடனும், கமல் போன்ற வளர்ந்த ஹீரோக்களுடனும் ஜோடி போட்டு நடித்தார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் டாப் ஹீரோயினாக வந்த அவர்; அங்கேயும் சிரஞ்சீவி, நாகார்ஜுனா என அனைவருடனும் ஜோடி சேர்ந்து நடித்தார். தமிழ் மற்றும் தெலுங்கில் கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கும் மேலாக அவரது கொடிதான் டாப்பில் பறந்துகொண்டிருந்தது என சொல்லலாம்.

திருமணம்: தொடர்ச்சியாக டாப்பில் இருந்த அவருக்கு 2000களின் ஆரம்பத்தில் மார்க்கெட் கொஞ்சம் சரிய ஆரம்பித்தது. உடனே தனது பால்ய கால தோழரை காதலித்த அவர்; திருமணமும் செய்துகொண்டார். அவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். திருமணம் ஆனவுடன் குடும்பத்தை கவனித்துக்கொள்வதற்காக சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்த அவரை; வாரணம் ஆயிரம் படத்தில் சூர்யாவுக்கு அம்மாவாக நடிக்க வைத்தார் கௌதம் மேனன். அதுவும் பெரிய வரவேற்பை பெற்றுக்கொடுத்தது.
இரண்டாவது இன்னிங்ஸ்: அந்தப் படத்துக்கு பிறகு பேட்ட, துருவ நட்சத்திரம், டூரிஸ்ட் ஃபேமிலி, குட் பேட் அக்லி ஆகிய படங்களில் முக்கியமான ரோலை ஏற்றார். முக்கியமாக டூரிஸ்ட் ஃபேமிலி படத்தில் ஈழத்து தமிழ் பேசி அட்டகாசப்படுத்தியிருந்தார். இன்னும் சில படங்களில் அவர் கமிட்டாகியிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் சமீபத்தில் நடந்த விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்டு அவர் பேசிய விஷயம் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்திருக்கிறது.
சிம்ரன் பேசியது: சிம்ரன் அந்த விழாவில் பேசுகையில் "திருமணம் ஆன பிறகு நமக்கு பொறுப்புகள் அதிகமாகிவிடும். எனவே படங்களில் நடிப்பதை நான் குறைத்துக்கொண்டேன். என்னுடைய குடும்பம் நிறைய சப்போர்ட்டாக இருந்தது. 2003ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டேன். திருமணமாகி 20 வருடங்களுக்கும் மேல் ஆகிவிட்டது. என்னால் எப்போதுமே எனது ரசிகர்களை விட்டு போகவே முடியவில்லை. அது எனக்கு பெருமையாகத்தான் இருக்கிறது" என்றார்.


Click it and Unblock the Notifications











