Simran: ஸ்டைலான ஆட்டம் போட்ட ஆல்தோட்ட பூபதி சிம்ரன்.. பந்தையத்துக்கு யாரு ரெடி? என்னா ஆட்டம்

சென்னை: 2000களில் கலக்கிக் கொண்டு இருந்த முன்னணி நடிகை சிம்ரன். அஜித், விஜய் என அப்போதைய வளர்ந்து வந்த இளம் நடிகர்கள் மற்றும் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து அசத்தியவர். சிம்ரன் தனது திருமணத்திற்குப் பின்னர் பெரும்பாலும் நடிக்கவில்லை. வெகு சில கதாபாத்திரங்களில் மட்டும் நடித்து வந்தார். இப்படி இருக்கையில் சிம்ரன் தற்போது மீண்டும் கம் பேக் கொடுத்து அசத்தி வருகிறார். இவர் நடித்த டூரிஸ்ட் ஃபேமிலி படம் கடந்த ஆண்டில் வெளியாகி பெரிய அளவில் ஹிட் அடித்த படங்களில் ஒன்று.

இப்படி இருக்கையில் நடிகை சிம்ரன் கடந்த ஆண்டு விருது நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில் நான் சமீபத்தில் நடித்த படத்தைப் பார்த்துவிட்டு ஒரு நடிகை ஒருவர் எனக்கு போன் செய்தார். போன் செய்தவர் கொஞ்சம் கூட அறிவில்லாமல் எனது படத் தேர்வு குறித்து விமர்சிக்க ஆரம்பித்துவிட்டார். ஆனால் அந்த படத்துக்குத்தான் மக்கள் என்னை பாராட்டினார்கள். மேலும் நான் தேர்வு செய்து நடித்த பல கதாபாத்திரங்களை நடிக்க அந்த நடிகைக்கு கொஞ்சமும் தைரியம் இருக்காது. டப்பா கதைகளில் நடிப்பதற்கு எனது மனதிற்கு பிடித்த கதாபாத்திரங்களில் நடித்து கொள்வேன் என்று தெரிவித்தார்.

சிம்ரன்: மேடையில் இவ்வாறு கூறியதும் பலரும் நடிகை ஜோதிகா தான் சிம்ரனை இவ்வாறு விமர்சித்திருக்க வேண்டும், அதனால் தான் சிம்ரன் இவ்வாறு பேசி உள்ளார் என்று பலரும் கூறினர். இப்படி இருக்கையில் இது தொடர்பாக பேட்டி ஒன்றில் நேரடியாக கேட்ட கேள்விக்கு, நான் அவ்வாறு சொன்ன பின்னர் சம்பந்தப்பட்ட நடிகை என்னிடத்தில் மன்னிப்பு கேட்டார் என்று தெரிவித்தார்.

Simran s Stylish Dance Video Goes Viral Fans Recall Her Classic Pairing With Vijay and Ajith Kumar
Photo Credit:

டேன்ஸ் வீடியோ: இப்படி இருக்கையில் நடிகை சிமரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஒரு ஹிப் ஹாப் பாடலுக்கு அட்டகாசமாக நடனமாடி வீடியோ வெளியிட்டுள்ளார். அதாவது, பாப் பாடகர் பால் டப்பா பாடிய பாடலுக்கு அட்டகாசமாக நடனமாடி உள்ளார். சிம்ரனின் இந்த ஸ்டைனால நடனம் ரசிகர்கள் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. பலரும் லைக்குகளையும் கமெண்ட்களையும் வாரி வழங்கி வருகிறார்கள். அதே நேரத்தில் ரசிகர்கள் பலரும் ஆல்தோட்ட பூபதி சிம்ரன் உடன் போட்டிக்கு யார் வர தயார் என்று கேள்வி கேட்டு வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X