யாருமே பார்க்காதபோது ரஜினியை நான்.. என்ன சிம்ரன் இதெல்லாம்?.. ஓஹோ இவ்வளவு நடந்திருக்கா?
சென்னை: கோலிவுட்டில் மிகப்பெரிய நடிகையாக வலம் வந்தவர் சிம்ரன். முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்த அவர்; ஒருகட்டத்தில் தனக்கு வாய்ப்புகள் குறைந்ததால் திருமணம் செய்துகொண்டு செட்டிலாகியிருந்தார். பிறகு வாரணம் ஆயிரம் படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்த அவர்; இப்போது குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்துவருகிறார். இந்நிலையில் நேற்று ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
சிம்ரனை தமிழ்நாட்டு ரசிகர்கள் தலை மேல் தூக்கி வைத்து கொண்டாடினார்கள். அவர் அறிமுகமான சில படங்களிலேயே ரசிகர்களுடைய கனவுக்கன்னியாக மாறிவிட்டார். கிளாமர் பாத்திரங்கள், ஹோம்லி கதாபாத்திரங்கள் என எதுவாக இருந்தாலும் அதில் அசால்ட்டாக ஸ்கோர் செய்யக்கூடியவர். இதனால் சிம்ரனை இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் புக் செய்துகொண்டே இருந்தார்கள். எனவே அவரது மாக்கெட்டும் அசுர வேகத்தில் வளர்ந்தது.
நடனம்னா சிம்ரன்தான்: நடிப்பு மட்டுமின்றி நடனத்திலும் பட்டையை கிளப்பக்கூடியவர் அவர். விஜய், கமல், பிரபுதேவா, ராஜுசுந்தரம் என சிறப்பாக நடனம் ஆடக்கூடியவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு ஈடு கொடுத்து ஆடக்கூடியவர். விஜய்யும்கூட ஒரு பேட்டியின்போது; சிம்ரனுடன் நடனம் ஆடுவதுதான் ரொம்பவே கஷ்டம் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இப்படி ஃபுல் ஃபார்மில் இருந்த அவருக்கு வயது ஆக ஆக வாய்ப்புகள் குறைந்தன.
ரீ என்ட்ரி: அதனையடுத்து திருமணம் செய்துகொண்டு செட்டிலாகிவிட்டார். அவருக்கு மொத்தம் இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். சூழல் இப்படி இருக்க வாரணம் ஆயிரம் படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். தொடரந்து படங்களில் நடித்த அவர் ரஜினியுடன் பேட்ட, சசிகுமாருடன் டூரிஸ்ட் ஃபேமிலி உள்ளிட்ட படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். இந்நிலையில் நேற்று ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சிம்ரன்; செய்தியாளர்களிடம் பேசினார்.

சிம்ரன் பேசியது: அவர் பேசுகையில், "நடிப்பு, நடனம் உள்ளிட்டவைகளை நிலையாக வைத்துக்கொள்வது கஷ்டமான ஒன்று. 20 வருடங்களாக அதை நிலையாக வைத்துக்கொண்டிருப்பதற்கு என்னுடைய நண்பர்கள்தான் காரணம். திரிஷா திறமையான நடிகை. முன்னணி நடிகர்களுடன் நடிக்கிறார். நானும் அவரும் ஜோடி படத்தில் ஒன்றாக நடித்தோம். அந்தப் படம் சூப்பர் ஹிட்டானது. அந்தப் படம் ஹிட்டானதை இப்போது நினைத்தாலும் மகிழ்ச்சிதான். அதேபோல் டூரிஸ்ட் ஃபேமிலி படமும் இந்த அளவுக்கு ஹிட்டாகும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இதுபோன்று வருடத்துக்கு இரண்டு படங்களாவது வர வேண்டும்.
ரஜினியை பற்றி சொன்னது: எனக்கு ரோல்மாடல் என்றால் ஸ்ரீதேவிதான். ரஜினியின் நடிப்பில் கூலி திரைப்படம் வெளியாகவிருக்கிறது. படத்தின் ட்ரெய்லர் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. நான் ரஜினியின் மிகப்பெரிய ரசிகை. பேட்ட ஷூட்டிங்கின்போது நான் ரஜினியைத்தான் பார்த்துக்கொண்டே இருப்பேன். அதை யாரும் கவனித்திருக்கமாட்டார்கள். ரஜினியுடன் நான் நடித்தது எனக்கு மகிழ்ச்சி.
அவரை போன்று எளிமையானவரை பார்க்க முடியாது. விழாக்களில் கலந்துகொள்ளும்போதுகூட எந்தவித மேக்கப்பும் இல்லாமல்தான் வருவார். ஆண்களுக்கு மட்டுமின்றி பெண்களுக்கே ரஜினி உதாரணம்தான்" என்றார். முன்னதாக சந்திரமுகி படத்தில் ஜோதிகா ஏற்றிருந்த கேரக்டரை சிம்ரன்தான் ஏற்றிருந்திருக்க வேண்டியது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











